ஈசூனில் உள்ள கடை ஒன்றில் முட்டைகள் வாங்கிய ஒருவர் அந்த முட்டைகளில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அருவருப்படைந்தார். ஈசூன் அவென்யு 1, புளோக் 431ல் அமைந்துள்ள ஸ்ரீ மினிமார்ட் கடையில் பத்து முட்டைகள் வாங்கியுள்ளார் ஃபியோனா. முட்டைகளை வீட்டிற்கு எடுத்துச்சென்ற பின்னர்தான் அவற்றில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்தார்.
பொட்டலத்தில் இருந்த ஒரு முட்டை கெட்டுப்போய்விட்டதாகவும் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் வடிந்துகொண்டிருந்ததாகவும் ஃபியோனா குறிப்பிட்டார். அதிலிருந்து நுர்நாற்றம் வீசியதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் தளத்தில் அவர் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்தார்.
சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது ஸ்ரீ மினிமார்ட் கடை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி அளிக்க கடை உரிமையாளர் முன் வந்துள்ளார்.

