சிங்கப்பூரில் சஷிமி வகை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது உணவில் உயிருடன் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவம் பிப்ரவரி 8ஆம் தேதி நடந்தது.
தஞ்சோங் பகாரில் உள்ள 100 AM கடைத்தொகுதியின் 'டான் டான் டான்கி' எனும் ஜப்பானிய உணவகத்தில் வாங்கிய உணவில் புழு இருந்தது. அது குறித்து அந்த மாது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
சமைக்கப்படாத மீன் துண்டில், உயிருடன் புழு இருந்தைக் கண்டு தாமும் தம் கணவரும் அதிர்ச்சியடைந்ததாக திருவாட்டி ஜேயிஸ் டான் தன் பதிவில் குறிப்பிட்டார்.
உணவைச் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில்தான் உணவில் புழு இருந்ததை தாம் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இதுபோன்ற சம்பவத்தை தாங்கள் எதிர்நோக்கியதில்லை என்றும் அவர் கூறினார்.
"சமைக்கப்படாத உணவுகளில் புழுக்கள் இருக்கக்கூடும், உணவைப் பலமுறை சோதிப்போம். இருப்பினும் சில முறை புழுக்கள் மீனின் தசைகளில் ஒளிந்திருக்கக்கூடும்," என்றார் 'டான் டான் டான்கி'யின் பேச்சாளர்.
வாடிக்கையளர்கள் உணவில் புழு இருந்ததைக் கண்டால் உடனடியாக கடை ஊழியர்களிடம் தகவல் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.