செப்டம்பர் 2ஆம் தேதி கிளமென்சியூ அவென்யூவில் 29 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
ஸ்டாம்ப் செய்தித் தளம் கேட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, காலை 8.21 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்தப் பெண் அசையாமல் கிடந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த மரணத்தில் எவ்வித சூதும் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கவில்லை.
ஸ்டோம்ப் செய்தித்தள வாசகர் ராபின், அப்பெண் உடல் சுற்றி மறைக்கப்பட்ட காட்சியைக் காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் ஒரு புல்வெளியில், வெள்ளைப் படுதாவைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

