பொய்யான சம்பளச் சீட்டு மற்றும் ஆவணங்களை அரசாங்க அமைப்பிடம் கொடுத்து அதன்மூலம் உதவி நிதி பெற்று மோசடி செய்துள்ளார் லியோ யீ லிங்.
55 வயதான லிங்கிற்கு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் பேஜ் என்னும் நிறுவனத்தில் லிங் பகுதி நேரமாக வேலை செய்தபோது மோசடி செய்தார். மோசடிக் குற்றம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம்வரை நடந்தது.
மனிதவள அமைச்சுக்குக் கீழ் இயங்கும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு வழங்கிய ஊதிய மானியத்தைப் பெற அவர் செய்தார்.
மோசடி மூலம் லிங் 17,900 வெள்ளியை உதவி நிதியாகப் பெற்றார்.
இருப்பினும் வழக்கு விசாரணையில் லிங்கின் மோசடிச் செயலில் ஃபர்ஸ்ட் பேஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இங் யூன் பைக்கு முக்கிய பங்கு வகித்தது தெரிய வந்தது.
41 வயதான இங், ஒரு மலேசியக் குடிமகள். அவர் அரசாங்கம் கொடுக்கும் உதவி நிதியை மோசடி செய்து பெற்றுக்கொள்ள லிங்கைப் பயன்படுத்தியுள்ளார்.
புதிய துறையில் சேரும் முழு நேர ஊழியர்களுக்கு மட்டுமே அந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனால் போலியான ஆவணங்களைக் கொடுத்து இருவரும் உதவித்தொகையைப் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
லிங் தெரிந்தே மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.