பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பொய் சொன்ன பெண்ணுக்குச் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பொய் சொன்ன பெண்ணுக்குச் சிறை

2 mins read
83fdbc5d-46e8-468c-b60e-48e6888b035f
முன்னாள் காதலன் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயது லியாவ் வான் டிங் புகார் அளித்திருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரிகளிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் போலியான புகார் அளித்த பெண் ஒருவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது முன்னாள் காதலன் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயது லியாவ் வான் டிங் என்னும் பெண் புகார் அளித்திருந்தார்.

ஆனால், விசாரணையின்போது முழு சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டதை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

உடலுறவில் ஈடுபடுவதற்கு ஒரு நாள்முன் லியாவ் பயன்படுத்திய கருத்தடை கருவி காலாவதியானது.

ஒருவேளை தாம் கருவுற்றால் முன்னாள் காதலன் அதற்குப் பொறுப்பேற்காமல் போய்விடுவாரோ என்று லியாவ் அஞ்சியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் உத்தரவின்கீழ் லியாவ்வின் முன்னாள் காதலனின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் ஏ1 என்று குறிப்பிடப்பட்டது.

உணவு விநியோக ஓட்டுநராகப் பணியாற்றிய லியாவ், 2024ஆம் ஆண்டு டிக்டாக் தளத்தில் ஏ1ஐ சந்தித்து கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் அவருடன் பழகினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் தங்களுக்கு இடையில் உள்ள உறவை முறித்துக்கொண்டனர்.

இருப்பினும், நண்பர்களாகத் தொடர்ந்து நீடித்த இருவரும் அவ்வப்போது உடலுறவு வைத்துக்கொண்டனர்.

அவ்வகையில், இவ்வாண்டு ஜனவரி 7ஆம் தேதி லியாவ்வும் அவரது முன்னாள் காதலனும் உடலுறவில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அதே நாளன்று தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ஈசூனிலுள்ள அக்கம்பக்க காவல் நிலையத்தில் லியாவ் புகார் அளித்தார்.

நான்காவது காவல்துறை அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்தபோது லியாவ் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும் முழு சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.

அரசாங்க ஊழியரிடம் போலியான தகவல்களை வழங்குவோருக்கு அதிகபட்சம் ஈராண்டுவரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்