சக ஊழியர்கள் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்ப்புகார் அளித்த 22 வயது சித்தி ஜுனைதா அசார், தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.
காவல்துறையினரிடம் தவறான தகவல் தெரிவித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ரெட்மார்ட்டில் பணிபுரிந்த அந்த மாதும் அவரது சக ஊழியர்களான மூன்று ஆடவர்களும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி லெவண்டர் ஸ்திரீட்டில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி மது அருந்தியதாகக் கூறப்பட்டது.
அந்த மூன்று ஆடவர்களும் அந்த மாதுடன் உடலுறவு கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
2021 செப்டம்பர் 6ஆம் அதிகாலை 3.25 மணியளவில், ஜூரோங் வெஸ்ட் காவல் நிலையத்திற்குச் சென்ற சித்தி, சக ஊழியர்கள் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அந்த மூன்று ஆடவர்களிடமும் சித்தியிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
அப்போது சித்தி, தன் சம்மதத்துடன்தான் அந்த மூன்று ஆடவர்களும் உடலுறவு கொண்டதாகக் கூறினார்.
ஹோட்டலிலிருந்து வீடு செல்வதற்குத் தன்னிடம் பணம் இல்லாததால், தன் உறவினரிடம் இருந்து பணம் பெறுவதற்காகப் பொய் கூறினேன் எனக் காவல்துறையிடம் அந்த மாது தெரிவித்தார்.

