பூகிஸ் எம்ஆர்டி நிலையத் தளமேடை இடைவெளியில் பெண் ஒருவரின் கால் சிக்கிக்கொண்டது.
இந்தச் சம்பவம் அக்டோபர் 8ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் நிகழ்ந்தது.
இதையடுத்து, அவரை மீட்கும் பணியில் நிலைய ஊழியர்களும் மற்ற பயணிகளும் தீவிரமாக இறங்கியதாக எஸ்எம்ஆர்டி ரயில் பிரிவுத் தலைவர் லாம் ஷியூ காய் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் இடது கால் (முழங்காலுக்குக் கீழ்) தளமேடை இடைவெளியில் மாட்டிக்கொண்டது.
தளமேடை இடைவெளிக்கும் ரயிலுக்கும் இடையே அப்பெண் அமர்ந்திருந்ததைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
அப்பெண்ணின் கால் இடைவெளியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக திரு லாம் கூறினார்.
அந்தப் பெண் ஆம்புலன்ஸ் மூலம் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகத் திரு லாம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் காரணமாக பூகிஸ் நிலையத்தில் கிட்டத்தட்ட ஐந்து நிமிட ரயில் சேவை இடையூறு ஏற்பட்டது.

