திருமணமான 49 வயது மாது ஒருவர் மூன்று ஆண்களிடம் காதல் நாடகமாடி, அவர்களிடமிருந்து பெரிய அளவில் பணம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆண்களில் ஒருவர் தன் பெற்றோரை ஏமாற்றி, அவர்களின் வாழ்நாள் சேமிப்புகளைக் கொடுக்கும்படி செய்ததாகத் தெரிகிறது.
ஜோசலின் குவேக் சொக் கூன் எனும் அந்த மாது மொத்தம் பத்துப் பேரை $880,000க்குமேல் ஏமாற்றினார்.
தன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுகூட அவர் தன் கணவரின் முன்னாள் சக ஊழியரை ஏமாற்றி $338,600 தொகையைப் பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெறுவதற்குத் தன்னால் உதவ முடியும் என்று குவேக் அவரிடம் பொய் சொன்னார்.
ஏமாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை குவேக் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
நீதிபதி தீர்ப்பளிப்பதை பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்தார்.