ஐஃபோன் போன்ற மின்சாதனங்கள் விற்பதாகக் கூறி 18 பேரை ஏமாற்றிய குற்றத்தை 40 வயது பெண் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
டியாங் கிம் ஹுவா என்ற அந்தப் பெண், நான்கு மாதங்களாக நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோரை ஏமாற்றி மொத்தம் $277,000 தொகையைப் பெற்றுள்ளார்.
விசாரணை தொடர்ந்தபோதும் 2022, அக்டோபர் 9ஆம் தேதி மீண்டும் அதே குற்றத்தைச் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
2022 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை டியாங் குற்றம் புரிந்ததாகத் தெரிகிறது. ஐவரை ஏமாற்றி $230,000க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக டியாங் கூறினார்.
இதர நபர்களை ஏமாற்றி பெருந்தொகையைப் பெற்ற குற்றம் தொடர்பிலான 14 குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தளவாட நிறுவனத்தில் வேலை செய்யும் டியாங், ஏமாற்றிய 13 பேரிடம் $38,000க்கும் அதிகமான தொகையைத் திரும்பக் கொடுத்துள்ளார்.
நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், சக ஊழியர்கள், கெருசல் போன்ற தளத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோரை டியாங் ஏமாற்றினார்.
டியாங் தம்மிடம் இல்லாத மின்சாதனப் பொருள்களுக்குப் பணம் கட்டும்படி அவர்களிடம் கூறியதுடன் விரைவாகப் பணம் ஈட்டும் வழிகள் குறித்தும் சொன்னதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு பெற்ற பணத்தைச் சூதாட்டம் மூலம் ஏற்பட்ட கடனைக் கட்ட டியாங் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.