தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலாளியை $168,000க்கும் மேல் ஏமாற்றிய மாதிற்குச் சிறை

1 mins read
3d3760df-f031-428e-a933-b174cecb8330
நூர் வஹிடா அப்துல் மாலிக், தாம் ஏமாற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியைக் கொண்டு சிம் பல்கலைக்கழகத்தில் தமது துணைப்பாடக் கட்டணங்களைச் செலுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தளவாட நிறுவனம் ஒன்றின் கணக்கியல், நிர்வாக அலுவலர் ஒருவர், வெற்றுக் காசோலைகளில் தன்னை பணம் செலுத்துபவராகக் குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் பணத்தில் $168,000க்கும் மேல் எடுத்தார்.

நூர் வஹிடா அப்துல் மாலிக், 32, தாம் ஏமாற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியைக் கொண்டு சிம் பல்கலைக்கழகத்தில் தமது துணைப்பாடக் கட்டணங்களைச் செலுத்தினார்.

தற்போது அவர் ‘லோட்டி குளோபல் லோஜிஸ்டிக்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தில் பணிபுரியவில்லை.

மார்ச் 14ஆம் தேதியன்று நூருக்கு இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் நம்பிக்கை மோசடிக்காக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

நூர் இதுவரை அவரது முன்னாள் முதலாளியிடம் $43,000ஐ திரும்பக் கொடுத்திருப்பதாக தற்காப்பு வழக்கறிஞர் அமர்ஜிட் சிங் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

தண்டனைக்குப் பிறகு, மேலும் அதிகமான பணத்தைத் திரும்பக் கொடுக்க அவர் திட்டமிடுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்