பேருந்துப் பயணத்தின்போது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருந்ததாகக் கூறி பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இம்மாதம் 26ஆம் தேதி வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி டிக் டாக் சமூக ஊடகத்தில் வெளியானது.
தனக்கு முன்பாக இருக்கும் இருக்கையில் கால்களை வைத்தபடி அவர் பயணம் செய்வதை அக்காணொளி காட்டுகிறது. அதனையடுத்து, கால்களை கீழே இறக்கி வைக்கும்படி பேருந்து ஓட்டுநர் அப்பெண்ணிடம் அறிவுறுத்துவதும் அதற்கு இணங்க மறுத்த அவர், ஓட்டுநருடன் விவாதம் செய்வதும் காணொளியில் தெரிகிறது.
பின்னர், அவர் தமது கால்களைத் தூக்கி, இருக்கையை ஒட்டி இருக்கும் கம்பிமீது வைத்தபடி பயணம் செய்வதையும் காணொளி காட்டுகிறது.
ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் நோக்கிச் செல்லும் பூன் லே வேயில் அப்பேருந்து சென்றபோது நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மாலை 6.17 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
“பொது இடத்தில் தொல்லை தந்ததாகக் கூறி, 50 வயதுப் பெண் பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது,” என்று காவல்துறை தெரிவித்தது.

