சிங்கப்பூர் பொது மருத்துவமனை மீது தொடுத்த வழக்கைத் திரும்பப்பெற்ற மாது

சிங்கப்பூர் பொது மருத்துவமனை மீது தொடுத்த வழக்கைத் திரும்பப்பெற்ற மாது

1 mins read
48a76e95-5943-4c99-98f8-87293b732602
பெய்த் காவ், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு 120,000 வெள்ளி கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொது மருத்துவமனை மீதும் அதன் மருத்துவர் மீதும் தொடுத்த வழக்கை மாது திரும்பப்பெற்றுள்ளார்.

பெய்த் காவ் என்ற அந்த 54 வயது மாது 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அதன் காரணமாக அவரது சிறுநீரகங்களில் ஒன்றில் வேலை செய்யும் திறன் குறைந்ததாக வழக்குதொடுத்தார். இந்நிலையில் வழக்குத் தொடரப்பட்ட இரண்டு நாள்களில் அதை திரும்பெற்றுள்ளார் பெய்த். மாதின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார் நீதிபதி.

மேலும் பெய்த், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வழங்க வேண்டிய 9,449.03 வெள்ளியை கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கூடுதலாக பெய்த், மருத்துவமனைக்கு 120,000 வெள்ளி கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்