தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் பிள்ளைகளுடன் பயணம் செய்த பெண்கள்; இணையவாசிகள் சாடல்

தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் பிள்ளைகளுடன் பயணம் செய்த பெண்கள்; இணையவாசிகள் சாடல்

படம்: ஃபேஸ்புக்/ஜின் லிங்

11 Apr 2026 - 8:32 pm

1 mins read

சத்தமாகப் பாடலைக் கேட்டவாறு தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் பிள்ளைகளுடன் சில பெண்கள் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் பயணம் செய்தனர்.

அதுதொடர்பான காணொளி தற்போது இணையத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.

காணொளியைப் பார்த்த இணையவாசிகள் பலர் அந்தப் பெண்களின் நடவடிக்கையைச் சாடியுள்ளனர்.

காணொளியில் ஒரு சாலையை நான்கு பெரிய தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் கடப்பதும் அதில் மூன்று சாதனங்களில் ஒவ்வொன்றிலும் இரு பெண்களும் இரு குழந்தைகளும் இருப்பதும் தெரிந்தது.

ஆபத்தான அந்தப் பயணம் பெரியவர்களுக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தாமல் அதில் இருந்த சிறுவர்களையும் பாதிக்கும் என்றும் இணையவாசிகள் கவலை தெரிவித்தனர். விதிமுறைகளைப் பின்பற்றாமல் பிள்ளைகளையும் பெரியவர்கள் கெடுக்கின்றனர் என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ‘கம்ப்ளெய்ன்ட் சிங்கப்பூர்’ என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி பதிவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்