தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி: காத்திருப்பு நேரம் 2 மணிநேரம்

2 mins read
b3ba18f8-4608-40b8-a92f-50f2dd1224ce
மலேசியாவிலிருந்து திரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரித்ததால் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்ச் பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால், மலேசியா செல்வோர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறுகிறது.

இதுபற்றிய தனது ஃபேஸ்புக் பதிவில் ஆணையம், சனிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) காலை 9.10 மணி நிலவரப்படி, மலேசியா செல்லக் காத்திருக்கும் கார் வரிசை உட்லண்ட்ஸ் அவென்யூ 5, வெளிச்சாலை 10A-ஐத் தாண்டி நீண்டிருப்பதாக அது கூறியது.

“உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை அடைய இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இது மலேசியாவிலிருந்து திரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது என்று அது விளக்கியது.

முன்னதாக, மார்ச் மாத பள்ளி விடுமுறைக் காலம், முஸ்லிம் நோன்புப் பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று ஆணையம் எச்சரித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

மார்ச் மாத பள்ளி விடுமுறைக் காலம் மார்ச் 14 முதல் 24ஆம் தேதிவரை நீடிக்கும். அதற்கு அடுத்து நோன்புப் பெருநாள் காலம் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்கு கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்வோர், குடிநுழைவு அனுமதியை எளிதாக்க, கடப்பிதழுக்கு பதில் கியூஆர் குறியீட்டை பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் ஜனவரி மாத சீனப் புத்தாண்டு காலத்தில் காரில் பயணம் செய்தோர் குடிநுழைவு அனுமதிக்காக மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியிருந்ததை ஆணையம் நினைவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்