தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட செம்பவாங் நகரமன்றம்

1 mins read
352cf76c-e8d4-4044-b053-86cd1be53253
முறையற்ற நிலையில் விட்டுச் செல்லப்பட்ட கனமான சோப்பாக்கள். - படம்: ஸ்டொம்ப்

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக் ஒன்றில் முறையற்ற நிலையில் விட்டுச் செல்லப்பட்ட கனமான சோப்பாக்களால் குடியிருப்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

உட்லண்டஸ் டிரைவ் 60ல் உள்ள 786B புளோக்கில் உள்ள 13வது மாடியில் டிசம்பர் 7ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களிடம் செம்பவாங் நகரமன்றம் மன்னிப்பு  கேட்டுக்கொண்டது.

சோப்பாக்கள் டிசம்பர் 9ஆம் தேதி அகற்றப்பட்டதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்  நகரமன்றம் தெரிவித்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்