கட்டடத்தை இடிக்கும் பணியின்போது கான்கிரீட் பாளம் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து வியாழக்கிழமையன்று (டிசம்பர் 5) ஜூரோங் ஐலண்டில் நேர்ந்தது.
அச்சம்பவம் குறித்து மாலை 5.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இயந்திரத்தின் துணையுடன் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பெரிய கான்கிரீட் துண்டு அவர்மீது விழுந்ததாகக் கூறப்பட்டது.
அவ்விடத்திலேயே அவர் மாண்டுபோனதைக் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் உறுதிப்படுத்தினர்.
விபத்து குறித்த கூடுதல் தகவல்களுக்காகக் காவல்துறை, மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவற்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டது.

