ஏழாவது மாடியில் இருந்து விழுந்த ஊழியர் உயிர் தப்பினார்

ஏழாவது மாடியில் இருந்து விழுந்த ஊழியர் உயிர் தப்பினார்

1 mins read
3bf4d501-bb89-4231-add2-2402e2cbc409
செம்பவாங்கில் கம்பாஸ் வேயில் செயல்படும் ஒரு கட்டுமான இடத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்ததாக 'சாயில்பில்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் குரூப்' நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கட்டுமான இடம் ஒன்றில் ஏழு மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் ஒருவர் உயிர்தப்பிவிட்டார்.

அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தச் சம்பவம் செம்பவாங்கில் கம்பாஸ் வேயில் செயல்படும் ஒரு கட்டுமான இடத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்ததாக 'சாயில்பில்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் குரூப்' நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஊழியர் ஏழாவது மாடியில் இருந்து விழுந்துவிட்டதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த ஊழியரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். அந்த விபத்து தொடர்பில் முழுமையான புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இதுபற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கம்பாஸ் அவென்யூ அருகே உதவி தேவைப்படுவதாக தனக்கு திங்கட்கிழமை காலை சுமார் 10.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறியது.

அங்கு விரைந்த படையினர், ஊழியரை கூ டெக் புவாட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

சிங்கப்பூரில் நவம்பர் மாத நிலவரப்படி வேலையிடத்தில் நிகழ்ந்த விபத்துகளில் 43 ஊழியர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2021ல் 37ஆக இருந்தது. 2020ல் 30ஆகவும் 2019ல் 39ஆகவும் இருந்தது.