பிரித்தம் சிங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பிரதமர் லாரன்ஸ் வோங், புதியவரைத் தேர்ந்து எடுக்குமாறு அனுப்பியுள்ள கடிதத்தைக் கவனமுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.
“கடிதத்தில் உள்ள விவரங்களை, எங்களது உட்கட்சி நடைமுறைகளின் வாயிலாகக் கவனமாக ஆராய்ந்து, உரிய நேரத்தில் பதிலளிப்போம்,” என்று பாட்டாளிக் கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னதாக, பிரித்தம் சிங்கை தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் அந்தப் பொறுப்புக்கு வேறொருவரை எதிர்க்கட்சி விரைவில் தேர்ந்து எடுக்கும் என நம்புவதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.
அந்தப் பதவி சிங்கப்பூரின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியமானது என்பதால் நீண்ட நாள்களுக்கு அது காலியாக இருக்கக்கூடாது என்றும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

