உலகக் கிண்ணம் 2026: இங்கிலாந்தின் ‘சொந்த மண்ணாக’ மாறிய ‘சைம்ஸ்’

உலகக் கிண்ணம் 2026: இங்கிலாந்தின் ‘சொந்த மண்ணாக’ மாறிய ‘சைம்ஸ்’

1 mins read
52d471d5-c3d3-41c7-ba76-1895efbd3368
சைம்ஸ் வளாகத்தில் உற்சாகத்துடன் காணப்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சக்திவாய்ந்த நார்வே அணியை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.

அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஓரளவு போராடி வென்றது. அந்த வெற்றி இங்கிலாந்து ரசிகர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள இங்கிலாந்து ரசிகர்களும் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

அலைமோதிய கூட்டம்

சைம்ஸ் (Chijmes) எனப்படும் வாழ்க்கைமுறை, கேளிக்கை வளாகத்தில் 5,000க்கும் அதிகமான ரசிகர்கள் இங்கிலாந்து-நார்வே ஆட்டத்தைக் காணத் திரண்டிருந்தனர். சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அதிகாலை ஐந்து மணிக்கு ஆட்டம் நடைபெற்றது.

பலர் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஆட்டம் நடப்பதையும் பொருட்படுத்தாது பலர் சைம்சில் திரண்டனர். அதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜூட் பெல்லிங்கம்

ஆட்டத்தில் இங்கிலாந்தின் இரு கோல்களையும் போட்டார் ஜூட் பெல்லிங்கம். அவர் உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர் என்றும் சில இங்கிலாந்து ரசிகர்கள் வருணித்தனர்.

எர்லிங் ஹாலண்டைக் கொண்ட சிறப்பான நார்வே அணியை வென்றிருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. 1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த உற்சாகம், சைம்ஸ் வளாகத்தை இங்கிலாந்தின் சொந்த மண்ணைப் போல் காட்சியளிக்கச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்தைச் சந்திக்கக் காத்திருக்கிறது, உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர் அணியான அர்ஜென்டினா.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுசிங்கப்பூர்உலகக் கிண்ணம்