ஆசியாவின் சிறந்த நிதி நிலையமாக ஹாங்காங் திகழ்கிறது என அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல் இடத்திலிருந்த சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி தன் முந்திய நிலையை ஹாங்காங் தக்க வைத்துக்கொண்டது.
உலகளவில் நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பதாகவும் ஆசியாவில் முதல் இடத்தில் இருக்கும் ஹாங்காங் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) வெளியான உலகளாவிய நிதி நிலையக் குறியீடு தெரிவித்தது.
டப்ளின், சிகாகோ, துபாய் ஆகிய நகரங்கள் அந்தத் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளன. இருப்பினும், ஷாங்காய், பெய்ஜிங், ஜெனிவா போன்ற நகரங்கள் தரவரிசையில் கீழ் இறங்கியுள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளால் ஹாங்காங்கில் செயல்பட்ட நிதித் துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், அந்நகரை விட்டுப் பல ஊழியர்கள் வெளியேறினர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டிருந்த நிறுவனங்களுக்கு நிதி நிலையங்கள் தரவரிசைப் பட்டியலில் ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

