இருவருக்கு இவ்வாண்டின் பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருது

இருவருக்கு இவ்வாண்டின் பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருது

1 mins read
ஒருவர் உலகப் புகழ்பெற்ற சமையல் வல்லுநர், மற்றொருவர் இளம் சமூகப் பணியாளர்
141ab0a9-4f85-4d7c-8ca9-bca24674bff6
சமையல் வல்லுநர் அக்மல் அன்வார், 42. - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

உலகப் புகழ்பெற்ற சமையல் வல்லுநர் அக்மல் அன்வார், 42, மலாய் நாளிதழான பெரித்தா ஹரியானின் இவ்வாண்டின் சாதனையாளராகக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முழுநேர சமூகப் பணியாளர் ஸுலைஹா ஸுல்கிஃப்லி, 30, இவ்வாண்டின் இளம் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.

மலாய்/முஸ்லிம் சமூகத்தில் தலைசிறந்து விளங்குபவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 26வது ஆண்டாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்றது.

2013ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்த அக்மல், ‘வைட் ரைஸ் கோ’ எனும் உணவு, பான நிறுவனத்தைத் தொடங்கினார். அவரின் மனைவி அதன் வர்த்தகப் பங்காளியாக உள்ளார்.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் ‘புரோஜெக்ட் ஹில்ஸ்’ இணை நிறுவனருமான ஸுலைஹா, இந்த விருது கிடைத்தது குறித்து தாம் மிகுந்த ஆச்சரியமும் கௌரவமும் அடைந்துள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்