2026 உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனம்; மூன்றாம் இடத்தில் எஸ்ஐஏ

2026 உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனம்; மூன்றாம் இடத்தில் எஸ்ஐஏ

1 mins read
ed4b4104-fe7b-4d57-9a8f-d6ad5b3c31df
2014ஆம் ஆண்டிலிருந்து, ‘ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம்’ இணையத்தளத்தின் ஒவ்வோர் உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனப் பட்டியலிலும் எஸ்ஐஏ இடம்பெற்றுள்ளது. ஸ்கூட், இவ்வாண்டுக்கான உலகின் ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்றது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம்’ இணையத்தளம், இவ்வாண்டு வெளியிட்ட உலகின் ஆகச் சிறந்த முழுச் சேவை விமான நிறுவனங்களுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மூன்றாவது இடத்தில் வந்துள்ளது.

டோஹாவில் உள்ள கத்தார் ஏர்வேஸ் முதல் இடத்தில் வந்தது. ஹாங்காங்கின் கெத்தே பசிபிக் இரண்டாம் நிலையில் வந்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், இவ்வாண்டுக்கான உலகின் ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்றது.

‘எச்கே எக்ஸ்பிரஸ்’, ‘ஜெட்ஸ்டார்’, ‘ஏர்ஏசியா’, ‘ஏர்பால்டிக்’ ஆகியவை அதற்கு முன்னிலையில் வந்தன.

சென்ற 2025ஆம் ஆண்டில், தத்தம் பிரிவுகளில், எஸ்ஐஏ ஐந்தாம் இடத்தையும் ஸ்கூட் எட்டாம் இடத்தையும் பெற்றன.

‘ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம்’ இணையத்தளம் 2014ஆம் ஆண்டிலிருந்து உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

இவ்வாண்டுக்கான பட்டியலுக்கு 370 விமான நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து, எஸ்ஐஏ அந்த இணையத்தளத்தின் ஆகச் சிறந்த முழுச் சேவை விமான நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒரு முறை 2019ஆம் ஆண்டில் அது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

ஸ்கூட் நிறுவனம், 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை ஆசிய பசிபிக்கில் ஆகச் சிறந்த மலிவுக் கட்டண விமான நிறுவனம் என்று பெயர்பெற்றது.

குறிப்புச் சொற்கள்