சிங்கப்பூர் வானில் ‘வர்ம்’ நிலவு

சிங்கப்பூர் வானில் ‘வர்ம்’ நிலவு

1 mins read
891dbff7-0156-46b4-9ed7-ffbecfd64e3b
மார்ச் 25ஆம் தேதி உட்லண்ட்ஸ் பகுதியிலிருந்து காணப்பட்ட ‘வர்ம்’ நிலவு. - படம்: கண்ணன்

மார்ச் 25ஆம் தேதி இரவு நேர வானத்தை அழகுபடுத்த உள்ளது ‘வர்ம்’ நிலவு.

பெருநிலாவுக்கு (சூப்பர்மூன்) எதிர்மறையாக, நுண்ணிய நிலா என்றும் அழைக்கப்படும் அது, முழுமையாகவும் பெரிதாகவும் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் மண்புழுக்கள் வெளிவரும் என்பதால் மார்ச் மாதத்தில் தோன்றும் முழு நிலவு ‘வர்ம்’ நிலவு என்று அழைக்கப்படுவதாக சேனல் நியூஸ் ஏசியா கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அறிவியல் நிலைய ஆய்வகம் கூறியது.

‘ஸ்டார்கேஸிங் சிங்கப்பூர்’ என்னும் உள்ளூர் குழு ஒன்று, நிலவு இரவு 7.15 மணிக்கு உதிக்கும் என்றும், வானம் தெளிவாக இருந்தால் இரவு 7.30 மணிக்குள் ‘வர்ம்’ நிலவு தென்படும் என்றும் கூறியது.

சேனல் நியூஸ் ஏசியா வாசகர் கண்ணன், ஞாயிறு இரவிலும் (மார்ச் 24) திங்கள் காலையிலும் (மார்ச் 25) நிலவைப் படம்பிடித்தார்.

திங்கள் காலை 6.50 மணிவாக்கில் நிலவு உதித்ததாகக் கூறிய அவர், செவ்வாய் காலை 7.30 மணி அளவில் நிலவு மறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்