‘தன் கையே தனக்கு உதவி’: பாட்டாளிக் கட்சியின் ஆண்ட்ரே லாவ்

2 mins read
f53eef2c-1e9d-4d41-a218-778d205d2ae0
பாட்டாளிக் கட்சியின் ஊடகப் பிரிவில் இருக்கும் திரு ஆண்டிரே லாவ் தெம்பனிஸ் பகுதியில் தொகுதி உலா மேற்கொண்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடிவமைப்பு, தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரான தனது தந்தையைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த பாட்டாளிக் கட்சி வேட்பாளரான ஆண்ட்ரே லாவ், சிறு வயதிலிருந்தே எதிலும் தன் கையே தனக்கு உதவி என்பதைக் கற்றுக்கொண்டார்.

தந்தையும் மகனுமாய் விளக்குகளைப் பொருத்துவது, மின் இணைப்புகளைக் கொடுப்பது போன்றவற்றில் ஒன்றித்து ஈடுபட்டனர்.

பின்னர் 33 வயது திரு ஆண்ட்ரே லோவும் அவரது மனைவியும் பொங்கோல் வட்டாரத்தில் மறுவிற்பனை வீட்டுக்கு குடிபெயர்ந்ததும் திரு லோ வீட்டின் மேல் சுவற்றில் மின்விசிறிகளைப் பொருத்துவது, குழாய் வேலைகள் என பெரும்பகுதி வீட்டுப் புதுப்பிப்பு வேலைகளை அவரே மேற்கொண்டார்.

தந்தையின் இந்த மனநிலை மகனுக்கும் கை கொடுத்தது. அவர் பாட்டாளிக் கட்சியின் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது தான் கற்றுக்கொண்ட குறியீட்டு முறையின் உதவியுடன் பாட்டாளிக் கட்சியின் இணையப்பக்கத்தை தற்போது இருக்கும் நிலையில் வடிவமைத்தார்.

திரு ஆண்ட்ரே லோவை கட்சி வேட்பாளராக பாட்டாளிக் கட்சி ஏப்ரல் 18ஆம் அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர் எந்தத் தொகுதியில் நிற்பார் என்பதை கட்சி கோடி காட்டவில்லை.

அவரது இந்த தன் கையே தனக்கு உதவி என்ற செயல்பாட்டை நாடாளுமன்றத்திலும் கடைப்பிடிக்கப் போவதாக திரு லோ, ரிவர்வேல் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் வெற்றுத் தளத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18ஆம்தேதி) செய்தியாளர்களிடம் கூறினார். அங்குதான் அவர் செங்காங் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லுவிஸ் சுவாக்கு உதவியாளராகவும் பணிபுரிந்தார்.

சிங்கப்பூர் மேலும் திறந்த சமுதாயமாக உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் திரு லோ.

குறிப்புச் சொற்கள்