நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் சாட்சியம் அளிக்கும்போது பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் என்பது குறித்த வழக்கில் திங்கட்கிழமை (பிப்ரவரி 17ஆம் தேதி) தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பில் கடந்த 2021ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது.
இதன் தொடர்பில், அந்தக் குழுவில் சாட்சியமளித்த திரு சிங் பொய்யுரைத்ததாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் திரு சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக $7,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
எனினும், தண்டனை விதிப்பு பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் $10,000 அபராதம் விதிக்கப்பட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படலாம்.
இந்த வழக்கில் தாங்கள் திரு சிங்கிக்கு எதிராக அபராதம் விதிக்கும்படி மட்டுமே நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்போவதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த சட்ட நிபுணர்கள், திரு சிங் நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கப்பட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.

