சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்தரச் சந்திப்பை நடத்தி வருகிறது. கவிமாலையின் 297வது சந்திப்பு, பிப்ரவரி 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தேசிய நூலகம், தளம் 5, பாசிபிலிடி அறையில் நடைபெறவிருக்கிறது.
கவிமாலையின் இம்மாதக் கவிஞர் அங்கத்தில் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் வ.கீராவின் சிறப்புரை இடம்பெறவிருக்கிறது. நிகழ்ச்சியை மாணவி சுருதிகா வழிநடத்த, ‘காதலிக்க நேரமில்லை’ எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம் மற்றும் பரிசளிப்பு ஆகிய வழக்கமான கவிமாலை அங்கங்களும் இடம்பெறவிருக்கின்றன.

