தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

8 மில்லியன் வருமான வரி மோசடி: ஏமாற்றியவருக்குச் சிறை

2 mins read
98106af0-5b40-4c99-819b-b8579b768b23
ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடிக் கும்பல் 183 விற்பனை விலைப் பட்டியல்களைத் தயாரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) நிர்வகிக்கும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டத்தை ஏமாற்றிய கும்பலில் முக்கிய அங்கம் வகித்தக் குற்றத்தை சிங்கப்பூர் ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அங் சீ கியோங் என்ற 48 வயது ஆடவர், பலவீனமானோரை மின்தூண்டிலிடும் (ஃபிஷிங்) குற்றம் உட்பட மேலும் இரண்டு மோசடிக் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

நாகூர் டிரேடிங் என்ற நிறுவனத்தின் பெயரில்,ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடிக் கும்பல் 183 விற்பனை விலைப் பட்டியல்களைத் தயாரித்துள்ளது. ஜிஎஸ்டி வரியை முன்வைத்து அந்நிறுவனம் 56 மில்லியன் வெள்ளி விற்பனை செய்ததாக ஆணையத்திடம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் சுமார் 8 மில்லியன் வெள்ளிக்கு வரிக்கழிவு கோரப்பட, ஆணையம் $772,000 வரை குற்றவாளியின் கும்பலுக்கு வழங்கியுள்ளது.

வரிக்கழிவு பெறும் நோக்கத்துடன் போலியான பரிவர்த்தனைகளை காட்டுவதற்காக வெற்றுத் தாட்களைக்கொண்டு ஒரு வழித்தடத்தை மோசடிக் கும்பல் ஏற்படுத்தியிருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கமளித்தனர்.

ஏமாற்றியதுடன் மேலும் பல குற்றங்களை ஒப்புக்கொண்ட ஆங்கிற்கு ஐந்து ஆண்டும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

ஆங்குடன் இணைந்து ஏமாற்றுத் திட்டம் தீட்டியோராக சிங்கப்பூரர் லுக் கியாம் சி ஹின் 40, வியட்னாமியர் டிரின் டியன் டுங் என்ற இருவரும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள்மீதான வழக்குகள் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை.

நாகூர் டிரேடிங் பெயரைப் பயன்படுத்தி ஜிஎஸ்டி வரிக் கழிவு பெறும் எண்ணத்தில் நேரடியான விற்பனை எதுவும் செய்யப்படாமல், 2015 பிப்ரவரி 4 முதல் 2016 ஜனவரி 28 வரை விற்பனை விலைப் பட்டியல்களைக் கொண்ட மோசடிப் பரிவர்த்தனைகள் இக்கும்பலால் அரங்கேற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்