தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் மஞ்சள் வாத்துப் போட்டி

1 mins read
8b3ea698-cf01-43e7-930f-d0d9160a903a
அட்வன்சர் கோவ் நீர்ப் பூங்காவில் 20,000 ரப்பர் வாத்து பொம்மைகள் போட்டிக்கு மிதக்கவிடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் அட்வென்சர் கோவ் நீர்ப் பூங்காவில் உள்ள 620 மீட்டர் நீளமுள்ள அட்வென்சர் நதியில் ஏறக்குறைய 20,000க்கும் மேற்பட்ட மஞ்சள் நிற ரப்பர் பொம்மை வாத்துகள் போட்டிக்கு மிதக்கவிடப்பட்டன.

ஒவ்வாரு வாத்து பொம்மைக்கு அடியில் ஒரு தனிப்பட்ட எண் இடப்பட்டிருந்தது.

ஜூன் 17 முதல் 21ஆம் தேதி வரை ‘டியான் ஸியாவ் அர்’ செயலி வழியாக ஒரே சீட்டில் அந்த உணவகத்தில் குறைந்தது 60 வெள்ளி செலவழித்தவர்களுக்கு அந்த எண் வழங்கப்பட்டிருந்தது.

சுமார் 13 நிமிடங்கள், இரண்டு வினாடிகளில் இறுதிக் கோட்டை ஆடி அசைந்து தொட்ட வாத்துப் பொம்மையின் வாடிக்கையாளர் 10,000 வெள்ளி முதல் பரிசை வென்றார். இரண்டாவதாக வந்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கு தலா 3,000 வெள்ளியும் மூவருக்கு தலா ஆயிரம் வெள்ளியும் பரிசாக வழங்கப்படுகிறது.

மூலிகை வாத்து இறைச்சிக்குப் பெயர்போன டியான் ஸியாவ் அர் உணவகமும் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவும் இணைந்து இந்தப் புதுமையான போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் செயலி வழியாகத் தகவல் தெரிவிக்கப்படவிருக்கிறது.

புக்கிட் கொம்பாக் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் சமூக மேம்பாடு, சமூகநல நிதிக்கு ‘டியான் ஸியாவ்’ உணவகம் 20,000 வெள்ளியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்