செல்வி சிம்ரன் கோரின் பரபரப்பான நேரப் பயணத்திற்கு அதிக சிந்தனை தேவையில்லை.
பொங்கோலில் வசிக்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 26 வயது மாணவியான இவர், தனது பையை எடுத்துக்கொண்டு நிலையத்தை நோக்கிச் செல்கிறார்.
காலை 8 மணி ரயில் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியமில்லை என்கிறார் செல்வி கோர். அவர் தற்போது பூகிஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைப் பயிற்சி செய்து வருகிறார்.
“ஒரு சில நிமிடங்களில் ரயில் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் விளக்குகிறார், “எனவே நான் தளமேடைக்குச் சென்று காத்திருக்கிறேன்.”
செல்வி கோர் ரயில்களை இயக்கும் பின்னணித் தொழில்நுட்பத்தைப் பற்றி அரிதாகவே சிந்திக்கிறார். ஆனால் “ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் நமது பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் வழித்தடத் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த (உதவக்கூடும்)” என்று அவர் கருதுகிறார்.
செல்வி கோரைப் போலவே, சிங்கப்பூரில் உள்ள 70 விழுக்காட்டிற்கும் அதிகமான பயணிகள், மேம்பட்ட தொழில்நுட்பம் ரயில் அமைப்புகளின் வசதி, திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று நம்புவதாக அண்மைய கருத்தாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
எஸ்பிஎச் மீடியா, எஸ்எம்ஆர்டி இரு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட இந்தக் கருத்தாய்வு, பிப்ரவரி 2026 இல் சிங்கப்பூரில் உள்ள 1,010 பொதுப் போக்குவரத்துப் பயனர்களிடம் நடத்தப்பட்டது. அதன் நோக்கம்: சிங்கப்பூர் பயணிகள் பொதுப் போக்குவரத்தில் ஏஐ மற்றும் தானியக்கம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எவ்வாறு உணர்கிறார்கள். மேலும் அவர்களின் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் யாவை என்பதைப் புரிந்துகொள்வதாகும்.
பதிலளித்தவர்கள் கான்டார் ப்ரொஃபைல்ஸ் ஆடியன்ஸ் நெட்வொர்க்கில் (Kantar Profiles Audience Network) இருந்து பெறப்பட்டனர். கான்டார் என்பது ஒரு தன்னிச்சையான சந்தை ஆராய்ச்சி நிறுவனமாகும்.
தொடர்புடைய செய்திகள்
அதிநவீன தொழில்நுட்பம்
உண்மை நிலை கருத்தாய்வில் பதிலளித்தவர்களின் அனுமானங்களுக்கு மிக அருகில் உள்ளது. பெருவிரைவு ரயில் கட்டமைப்பு என்பது 24/7 இயங்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பாகும் – இது தொழில்நுட்பத்தையும் மனிதர்களையும் நம்பியிருக்கிறது என்று எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமைப் பொறியியல் அதிகாரி ஆங் ஹாங் குவான், 59, கூறுகிறார்.
இந்தப் பொதுப் போக்குவரத்து நடத்துநர், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை ஆதரிக்க செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகிறது, இருப்பினும் “மனித கண்காணிப்பு இன்னும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார்.
இது பயணிகள் ஏற்கெனவே சிந்தித்துக் கொண்டிருக்கும் சமநிலையாகும். மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஜென் ஸீ (Gen Z) பயணிகளின் முதன்மைக் கவலை மனித மேற்பார்வையின் பற்றாக்குறை என்பதாகும். இதனை இந்த வயதினரில் 44 விழுக்காட்டினர் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று அதே கருத்தாய்வு கண்டறிந்துள்ளளது.
ஏஐ பயன்படுத்தப்படுவதாகத் தான் கருதினாலும், தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும் அமைப்பைக் கண்காணிக்க மனிதர்கள் இருக்க வேண்டும் என்றும் தான் நம்புவதாக செல்வி கோர் கூறுகிறார்.
“தங்களின் வேலையை எளிதாக்க (ரயில் நடத்துநர்கள்) இப்போது ஏஐ-ஐப் பயன்படுத்துகிறார்கள் என்றால் எனக்கு ஆச்சரியமில்லை,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் அவர்கள் அதை 100 விழுக்காடு சார்ந்திருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.”
தனது வேலைப் பயிற்சிக்கும் பள்ளிப் பணிகளுக்கும் சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot) போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் செல்வி கோர், ஏஐ தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தவர். இது அதன் வரம்புகளைப் பற்றி அவரை மேலும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்கிறது.
அவர் சாட்போட்களை (chatbots) உதாரணமாகக் குறிப்பிடுகிறார். அவை பெரும்பாலும் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பதில்களில் தவறுகள் இருக்கலாம் என்பதைப் பயனர்களுக்கு நினைவூட்டும் பொறுப்புத் துறப்புகளைக் கொண்டுள்ளன.
திரு ஆங் இதை ஒப்புக்கொள்கிறார். “சில விஷயங்களை வேகமாகச் செய்ய ஏஐ நமக்கு உதவும்,” என்று அவர் விளக்குகிறார். “இது முடிவெடுப்பதற்கான ஆதரவை (மற்றும்) சில தீர்வுகளை நமக்கு முன்மொழிய உதவலாம். ஆனால் இறுதி முடிவு எடுப்பவர் இன்னும் மனிதரே.”
தொழில்நுட்பத்தை நோக்கிய நடத்துநரின் அணுகுமுறை தொழிலாளர்களை மாற்றுவது அல்ல. மாறாக அவர்கள் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வதற்கான திறனை மேம்படுத்துவதே ஆகும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
“சாதாரணமான மற்றும் கடினமான விஷயங்களைத்தான் நாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தானியக்கமாக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறுகிறார். (மற்றொரு கதையைப் பார்க்கவும்)
மனிதத் தொடர்பு
செல்வி கோர் போன்ற இளம் பயணிகள் ஏஐ-ன் வரம்புகளைப் பற்றி மிகவும் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் வேளையில், 65 வயதான செல்வி சாய் ஜின் லீ போன்ற மூத்த பயணிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் நடைமுறைப் பார்வையைத் தழுவுகிறார்கள்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விட, இந்த அமைப்பு தொடர்ந்து சீராக இயங்கும் என்ற உறுதியின் மீதே தான் அதிக அக்கறை காட்டுவதாக செல்வி சாய் விளக்குகிறார்.
“அது வேலை செய்யும் வரை, ஓகே தான்,” என்கிறார் இந்த பாலர் பள்ளி ஆசிரியர்.
அவர் தற்போது ஓராண்டு ஓய்வில் (sabbatical) உள்ளார். ஆரம்பக் காலக் குழந்தைப் பருவக் கல்வியில் பகுதி நேர பட்டயக் கல்வியை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பாடம் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை நடக்கும்.
பீஷானில் வசிக்கும் செல்வி சாய், பாய லேபாரில் உள்ள வகுப்புகளில் கலந்துகொள்ள ரயிலில் செல்கிறார். ரயில் அமைப்புகள் ஏற்கெனவே பெருமளவில் தானியக்கமாக்கப்பட்டுள்ளன என்று தான் நீண்ட காலமாக கருதி வருவதாக அவர் கூறுகிறார்.
அவரைப் போலவே, 62 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ‘பூமர்கள்’ தான், பொதுப் போக்குவரத்து அமைப்பு முழுவதும் செயல்பாடுகளை நிர்வகிக்க மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக நம்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கருத்தாய்வு கண்டறிந்துள்ளது.
அவர்களின் மிகப்பெரிய கவலை அது பயணிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கமாகும். முதியவர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்குத் தொழில்நுட்பம் விஷயங்களை மிகவும் கடினமாக்கிவிடும் என்று பூமர்களில் 51 விழுக்காட்டினர் கவலைப்படுகிறார்கள். அது இணையப் பாதுகாப்பு, மனித மேற்பார்வை மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் குறித்த அவர்களின் கவலைகளை விட மேலோங்கி நிற்கிறது.
பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் மனிதத் தொடர்பு முக்கியமானது என்று திரு ஆங் கூறுகிறார். எம்ஆர்டி நிலையங்களில், உங்களுக்கு உதவக்கூடிய பணியாளர்கள் இருக்கிறார்கள். “நீங்கள் பல்வேறு வகையான மக்களைக் கவனித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.”
“காணாமல் போன குழந்தை அல்லது ஞாபக மறதி நோய் உள்ள ஒருவராக இருந்தாலும் சரி – மனிதத் தொடர்பு முக்கியமானது, மேலும் இதைத்தான் நாம் நமக்கு நெருக்கமாகக் கருதுகிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
அதன் மையக்கருத்தில், ஒவ்வொரு பயணியும் ஒரே விஷயத்தையே விரும்புகிறார்கள் என்று திரு ஆங் கூறுகிறார். “நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள், நீங்கள் ரயிலில் சீராகப் பயணம் செய்ய விரும்புகிறீர்கள்,” என்று அவர் கூறுகிறார்.
இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த செயல்திறனைத் தான் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை, கடந்த ஜூலை மாதம் ஸ்பெயினின் 10வது பெரிய நகரமான அலிகாண்டேவிற்கு (Alicante) கோடைகாலப் பரிமாற்றப் பயணத்திற்குச் சென்றபோது செல்வி கோர் உணர்ந்தார். சிங்கப்பூரில், பரபரப்பான நேரங்களில் பொதுவாக இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் வருகின்றன.
அலிகாண்டேயின் டிராம்கள் நாள் முழுவதும் நிலையான நேரங்களில் வருகின்றன. “ஒருமுறை நான் எனது காலை டிராமை சில நிமிடங்கள் வித்தியாசத்தில் தவறவிட்டேன், அதன் விளைவாக தாமதமாகச் சென்றேன்,” என்று அவர் நினைவு கூர்கிறார். அடுத்த டிராம் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகுதான் வரும்.
இந்த அனுபவம் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மீது தனக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தியதாக செல்வி கோர் கூறுகிறார். “அதிக முயற்சி இல்லாமல் (துல்லியமான நேரத்தில்) என்னை அழைத்துச் செல்ல நான் ரயில் அமைப்பை நம்பியிருக்க முடியும்.”
தொழில்நுட்பத்துடன் சரியான பாதையில்
எஸ்எம்ஆர்டியைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் என்பது ரயில் அமைப்புகளை மேம்படுத்துவது மட்டுமல்ல என்கிறார் அதன் குழுமத் தலைமைப் பொறியியல் அதிகாரி ஆங் ஹாங் குவான், 59.
தொழில்நுட்பத்திற்கான நடந்துனரின் அணுகுமுறை இரண்டு முக்கிய முன்னுரிமைகளை மையமாகக் கொண்டுள்ளது என்று அவர் விளக்குகிறார்: ரயில் செயல்பாடுகளைப் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருப்பது, அதே நேரத்தில் இந்த அமைப்பைப் பயன்படுத்தும் மற்றும் இயக்கும் மக்களுக்கு ஆதரவளிப்பது.
- பாதுகாப்பு: தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு (CBTC) அமைப்பு என்பது ரயில்கள் தங்களின் நிகழ்நேர இருப்பிடம் மற்றும் வேகத் தரவை ரயில் பாதை அமைப்புகளுடன் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் ஒரு சமிக்ஞை அமைப்பாகும். ரயில் பாதை அமைப்புகள் அதன் வட்டாரத்திற்குள் ரயில்களின் இருப்பிடத்தைக் கண்காணித்து, அவற்றுக்கிடையேயான பாதுகாப்பான தூரத்தைக் கணக்கிட்டு, வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க ரயில்களுக்கு சமிக்ஞை கொடுக்கின்றன. தற்போது எம்ஆர்டி கட்டமைப்பு முழுவதும் பயன்படுத்தப்படும் CBTC அமைப்பு, பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான குறுகிய ரயில் இடைவெளிகளைச் சாத்தியமாக்குகிறது என்று திரு ஆங் கூறுகிறார்.
- நம்பகத்தன்மை: எஸ்எம்ஆர்டியின் தரவு பகுப்பாய்வு தளமான ஜார்விஸ் (Jarvis), ஜனவரி 2026ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சாத்தியமான சமிக்ஞைகளை முன்கூட்டியே கண்டறிந்து, தடங்கல்கள் ஏற்படும் முன் பொறியாளர்கள் அவற்றைச் சரிசெய்ய அனுமதிப்பதன் மூலம் முன்கணிப்பு பராமரிப்பை ஆதரிக்கிறது.
- ஆதரவு: தொழிலாளர்களின் உடல் ரீதியான சிரமத்தைக் குறைக்கவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் பீஷான் டிப்போவில் தானியக்கமும் இயந்திரவியலும் பயன்படுத்தப்படுகின்றன என்று திரு ஆங் குறிப்பிடுகிறார். ரயில்-வழிகாட்டப்பட்ட வாகனங்கள் 4,300 கிலோ வரை எடையுள்ள பெரிய ரயில் பாகங்களை பணிநிலையங்களுக்கு இடையே தானாகவே நகர்த்துகின்றன. எனவே தொழிலாளர்கள் கனரக உபகரணங்களை கைமுறையாக இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்தில் பழுதுபார்க்கப்படக்கூடிய ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களின் எண்ணிக்கையும் இரண்டிலிருந்து நான்காக இரட்டிப்பாகியுள்ளது.

