தகுதி பெறும் குடும்பங்கள் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை $60 மதிப்புள்ள பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பற்றுச்சீட்டுகளுக்கு இணையம் மூலம் அல்லது சமூக மன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பேருந்து மற்றும் ரயில் கட்டணம் 5 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இந்தக் கூடுதல் கட்டணத்தைச் சமாளிக்க இந்தப் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெற குடும்பங்களின் தனிநபர் மாத வருமானம் $1,800 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெறமாட்டார்கள்.
இந்தப் பத்து மாதங்களில் கூடுதல் உதவி தேவைப்படும் குடும்பங்கள் இணையம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் அல்லது அவர்கள் வசிக்கும் வட்டாரத்தில் உள்ள சமூக மன்றங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
குடும்ப வருமானத் தகுதி அடிப்படையில் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெறாதவர்களுக்கு இது பொருந்தும்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகவலைப் போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் இணைந்து திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்டன.
பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கட்டண அட்டைகளை நிரப்பலாம் அல்லது மாதாந்திர அட்டைகளை வாங்கலாம்.
தகுதி பெறும் ஒவ்வோர் குடும்பத்துக்கும் ஒரு பற்றுச்சீட்டு மட்டுமே கிடைக்கும்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏறத்தாழ 300,000 குடும்பங்கள் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு தொடர்பான கடிதங்கள் அல்லது மின்கடிதங்களைப் பெற்றனர். இந்தக் குடும்பங்கள் 2024ஆம் ஆண்டிலும் அப்பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டன. அவை தொடர்ந்து வருமானத் தகுதி அடிப்படையில் பற்றுச்சீட்டுகளைப் பெறத் தகுதி உள்ளவையாக இருந்தன.
விண்ணப்பம் செய்த பிறகு, தகுதி பெறும் குடும்பங்களுக்கு அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சிம்ப்லிகோ செயலி, சிம்ப்லிகோ முனையங்கள், கட்டண அட்டை நிரப்பு முனையங்கள், சேவை உதவி முனையங்கள், சிம்ப்லிகோ பயணச்சீட்டு அலுவலகங்கள் அல்லது சிம்ப்லிகோ பயணச்சீட்டு சேவை நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறை விளக்கத்தைக் கடிதங்கள் கொண்டிருக்கும்.
பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான கடைசி நாள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி.

