கோப்பித்தியாம் கடைகளில் 60 காசுக்கு சூடான காப்பி, தேநீர்

கோப்பித்தியாம் கடைகளில் 60 காசுக்கு சூடான காப்பி, தேநீர்

1 mins read
abe1ca73-24f6-4593-8cfe-12753a36a15a
ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை சலுகை விலையில் கோப்பி-ஓ, தே-ஓ பானங்களை வாங்கலாம். - கோப்புப் படம்: ஊடகம்

சிங்கப்பூர் முழுவதும் உள்ள கோப்பித்தியாம் கடைகளில் ஜூன் மாதம் முதல் பால் கலக்காத காப்பி அல்லது தேநீரை 60 காசுக்கு வாங்கலாம்.

ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை சலுகை விலையில் அந்த பானங்களை வாங்கலாம்.

சிங்கப்பூரின் 60வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோப்பித்தியாம் கடைகளை நடத்தும் ஃபேர்பிரைஸ் குழுமம் அதனை அறிவித்து உள்ளது.

தீவு முழுவதும் 79 கோப்பித்தியாம் கடைகள் உள்ளன. அவற்றில் மூன்று மாதங்களுக்கு கோப்பி-ஓ, தே-ஓ ஆகியவற்றை 60 காசுக்கு வாங்கிப் பருகலாம்.

அத்துடன், கோப்பி-ஓ அல்லது தே-ஓ பானத்துடன் சாக்லெட் டோஸ்ட் இணைந்த உணவுத்தொகுப்பை $1.60 என்னும் சலுகை விலையில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோப்பித்தியாம் கடைகளில் பெறலாம் என்ற அறிவிப்பையும் அது வெளியிட்டு உள்ளது. அதன் வழக்கமான விலை $2.50. இதுவும் 60ஆம் ஆண்டு கொண்டாட்டச் சலுகைதான்.

இருப்பினும் கிரீன்ரிட்ஜ், 504 ஈசூன், 542பி சிராங்கூன் நார்த் ஆகிய இடங்களில் உள்ள கோப்பித்தியாம் கடைகளில் அச்சலுகை இல்லை.

குறிப்புச் சொற்கள்