வாழ்க்கைத்தொழில் அனுபவம் பெற்ற இளையர்கள்

வாழ்க்கைத்தொழில் அனுபவம் பெற்ற இளையர்கள்

2 mins read
0058d477-ead4-46c6-806f-4a594928f168
கவ்டெக் அமைப்பு நடத்திய வேலைப் பயிற்சி அனுபவ நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள இளையர்களுக்கு மின்னிலக்க நிர்வாகம் குறித்து அறிமுகம் செய்ய கவ்டெக் அமைப்பு ஏற்பாடு செய்த வேலை அனுபவ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 இளையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கம் முழுவதும் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் கொள்கை, அபாய மேலாண்மை, தணிக்கை போன்ற துறைகளைப் பற்றியும் இளையர்கள் அறிந்துகொள்ள அந்த நிகழ்ச்சி நல்ல வாய்ப்பளித்தது.

“வேலைவாய்ப்பு அறிமுகத் திட்டங்கள் போன்ற முயற்சிகளின் மூலம் இளம் சிங்கப்பூரர்களுக்குத் தொழில்நுட்பத் துறைகளிலும் மின்னிலக்க அரசாங்கத்திலும் பயனுள்ள அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். அதன் மூலம் இத்துறையில் உள்ள வாய்ப்புகளை அவர்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவ முடியும்,” என்றார் கவ்டெக் அமைப்பின் கலாசாரம், சமூகம், இளையர் குழுமத்தின் மூத்த இயக்குநர் பெக்கி மா.

2025ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 8,800 இளையர்களும் மாணவர்களும் வேலைப் பயிற்சி அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தேசிய இளையர் மன்றம் தெரிவித்தது.

அதில் பங்கேற்றோரில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர், எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான புரிதலுடன் திரும்பியதாக மன்றம் குறிப்பிட்டது.

இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் 10,000க்கும் மேற்பட்ட வேலைப் பயிற்சி அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளில் கவ்டெக் அமைப்பின் அமர்வுகளும் இடம்பெற்றன.

2030ஆம் ஆண்டுவரை 30,000 வேலை அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளையர்கள் வாழ்க்கைத்தொழிலைத் தேர்ந்தெடுப்பது, நட்புவட்டத்தை வளர்த்துக்கொண்டு தனிப்பட்ட விதத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் ‘எஸ்ஜி யூத்’ திட்டத்தின் ஒரு பகுதி இந்த விரிவாக்கம்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 34 துறைகளில் வேலை அனுபவத்தைத் தரும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய இளையர் மன்றம் கூறியது.

தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு, பொதுச் சேவை ஆகியவற்றில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன

சுகாதாரப் பராமரிப்பு, நிதிச் சேவைகள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை, பொறியியல் ஆகிய துறைகளில் இன்னும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
வாழ்க்கைத்தொழில்இளையர்அனுபவம்