புக்கிட் மேரா மளிகைக்கடையில் பணம், சிகரெட்டுகளைத் திருடிய இளையர்கள் கைது

புக்கிட் மேரா மளிகைக்கடையில் பணம், சிகரெட்டுகளைத் திருடிய இளையர்கள் கைது

படம்: சிங்கப்பூர் காவல்துறை

20 Oct 2026 - 7:13 pm

1 mins read

புக்கிட் மேராவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணம், 290 சிகரெட் பொட்டலங்களைத் திருடிய குற்றத்துக்காக 15, 17 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் புதன்கிழமை (அக்டோபர் 21) குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

ஜாலான் புக்கிட் மேராவில் அமைந்துள்ள மளிகைக்கடையில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 19) காலை 7.15 மணியளவில் அத்துமீறி நுழைந்து திருடிய சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் கடையில் இருந்த ஏறத்தாழ $2,100 பணமும், ஏறத்தாழ $3,000 மதிப்பிலான 290 சிகரெட் பொட்டலங்களும் திருடப்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்தை அடைந்த மத்தியக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், காவல்துறைக் கண்காணிப்புக் கேமராக்கள், கண்காணிப்புக் கேமரா ஆகியவற்றில் பதிவான காட்சிகளின் உதவியோடு சம்பந்தப்பட்ட இரு சிறுவர்களை அடையாளம் கண்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து $462 ரொக்கமும் 203 சிகரெட் பொட்டலங்களும் மீட்கப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்