போதைப்பொருள் கொண்ட மின்சிகரெட் வைத்திருந்ததாக இளையர்மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் கொண்ட மின்சிகரெட் வைத்திருந்ததாக இளையர்மீது குற்றச்சாட்டு

1 mins read
6246647d-1326-4a78-8d33-d9436f87deb3
போதைப்பொருள் கடத்தலில் இளையர்கள் இருவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

கஞ்சாவுடன் தொடர்புடைய பொருள் கொண்ட மின்சிகரெட் வைத்திருந்ததாக இளையர் ஒருவர் மீது புதன்கிழமை (செப்டம்பர் 3) குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 18ஆம் தேதியன்று அந்த இளையரும் இன்னொரு இளையரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

குற்றம் புரிந்தபோது இருவருக்கும் 17 வயது.

அந்த இன்னொரு இளையருக்குத் தற்போது 18 வயதாகிறது.

குற்றம் புரிந்தபோது இருவரும் 18 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்ததால் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் அவர்களது பெயர்களை வெளியிடக்கூடாது.

இருவரும் சிங்கப்பூரர்கள்.

இந்த இருவரில் இளையர் மீது புதன்கிழமையன்று ஏழு குற்றச்சாட்டுகள் பதிவாகின.

அவை மின்சிகரெட் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை.

பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 5 மணி அளவில் இருவரும் புளோக் 94 தோ பாயோ லோரோங் 4 அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்