அரசு ஊழியரைத் தாக்கிய இளையருக்குச் சிறை

அரசு ஊழியரைத் தாக்கிய இளையருக்குச் சிறை

1 mins read
இளையர் ஓர் அதிகாரியின் கையில் கீறினார்
72b41009-ecb5-4010-968c-a52abba536ad
இளையர் செய்த குற்றத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனாவைச் சேர்ந்த 18 வயது இளையர் விமான நிலையத்தில் உள்ள காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றத்திற்காக ஆறு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேன் குவான்யோ என்னும் அந்த இளையர் தமது கடப்பிதழ், பணப் பையைத் தொலைத்துவிட்டதாக விமான நிலைய காவல்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

புதிய கடப்பிதழுக்குச் சீனத் தூதரகத்தை நாட வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளையர் முரட்டுத் தனமாக நடந்துகொண்டார். பின்னர் குரலை உயர்த்திக் கத்தினார்.

இளையரைக் கட்டுப்படுத்தும்போது அவர் ஓர் அதிகாரியின் கையில் கீறினார். இதனால் சிறு காயங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் இளையரைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு நடந்தது.

இளையர் செய்த குற்றத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்