அக்டோபர் 11ஆம் தேதிமுதல் தேடப்பட்டுவரும் ஹுவான் கேப்ரியல் கன்செங்கோ தபரன் எனும் 18 வயது இளையர் குறித்த தகவல்களைக் காவல்துறை நாடுகிறது.
புளோக் 208 சிராங்கூன் சென்ட்ரலில் அக்டோபர் 11ஆம் தேதி காலை 10 மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 12) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் எண்ணில் காவல்துறையுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப்பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

