தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்கு கவலைக்குரியது: ஃபைஷால் இப்ராஹிம்

3 mins read
6e7ff8f6-a9ba-4f83-aa75-14ca4d0b039a
சமய மறுவாழ்வுக் குழுவின் 20வது ஆண்டு ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

இளையர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்கு தொடர்ந்து கவலைக்குரிய விவகாரமாக இருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்படும் இளையர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை மணியை ஒலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சமய மறுவாழ்வுக் குழுவின் 20வது ஆண்டு ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் பேசினார்.

இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 24) மண்டாய் மழைக்காடு உல்லாசத் தளத்தில் நடைபெற்றது.

கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 17 இளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் சுட்டினார்.

மின்னிலக்க முறை காரணமாக உலக மக்களிடையிலான இணைப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இளையர்கள் அதிக நேரம் செலவிடும் மின்னிலக்கத் தளங்களில் தீவிரவாத சித்தாந்தம் தொடர்பான தகவல்கள் எளிதில் கிடைப்பதாகவும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் கூறினார்.

தீவிரவாதப் போக்கால் இளையர்கள் ஈர்க்கப்படுவதை இது விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்.

தங்கள் சுய அடையாளத்தை இளையர்கள் உருவாக்கி வரும் நிலையில் இத்தகைய சித்தாந்தங்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளும்போது அது அவர்களை வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் மூளைச் சலவைக்கு ஆளாகக்கூடும் என்றும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் கூறினார்.

சிங்கப்பூரில் மிகக் கடுமையான துப்பாக்கித் தடுப்புச் சட்டங்கள் நடப்பில் இருப்பதால் முப்பரிமாண அச்சிடும் முறையைப் பயன்படுத்தி ஆயுதத்தை உற்பத்தி செய்ய 17 வயது இளையர் ஒருவர் திட்டமிட்டதாக அவர் கூறினார்.

வலதுசாரி ஆதரவாளரான இந்த இளையர், கடந்த மார்ச் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் தடுத்து வைக்கப்பட்டார்.

அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலிருந்து வெளியே வரும் குறைந்தது 100 முஸ்லிம்களைக் கொல்ல அவர் இலக்கு கொண்டிருந்தார். அதன் பிறகு தமது உயிரை மாய்த்துக்கொள்ள அந்த இளையர் திட்டமிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் தீவிரவாத மிரட்டல் தொடர்பான சூழல் அதிரடியாக மாறியுள்ளதை இணைப் பேராசிரியர் சுட்டினார். அது மோசமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சமய மறுவாழ்வுக் குழு, பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளால் (குறிப்பாக, ஜாமியா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு) ஏற்படும் மிரட்டல்களை எதிர்கொண்டது. இந்தப் பணியில்தான் அது முதலில் கவனம் செலுத்தியது.

ஆனால் சுய தீவிரவாதப் போக்கு தொடர்பான மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் அதற்கு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமயம் தொடர்பான போதனைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தவறான பாதையில் செல்வோரைத் திருத்த சமய மறுவாழ்வுக் குழு 2003ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இஸ்லாமிய சமயக் கல்விமான்களும் ஆசிரியர்களும் இதில் இணைந்து செயல்படுகின்றனர்.

சுய தீவிரவாதப் போக்கு கொண்ட தனிநபர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை இக்குழு தொண்டூழிய முறையில் வழங்குகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜாமியா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்களின் மனைவிமார்களுக்கும் பிள்ளைகளுக்கும் சமய ரீதியான வழிகாட்டுதல் வழங்க 2005ஆம் ஆண்டில் பெண் ஆலோசகர்களை சமய மறுவாழ்வுக் குழு முதல்முறையாக நியமித்தது.

இன்று, குடும்பத்தை மையமாகக் கொண்ட தலையீடு, சமய மறுவாழ்வுக் குழு மேற்கொள்ளும் முக்கிய உத்திமுறையாகத் திகழ்வதாக அக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் முகம்மது அலி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்