சிங்கப்பூரில் ‘யூடிரிப்’ அட்டையைப் பயன்படுத்துவோர் இனி அதில் நாணயப் பரிமாற்றம் செய்து மலேசிய ரிங்கிட்டை நிரப்பிக்கொள்ளலாம்.
‘யூடிரிப்’ செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பணப்பை’ அம்சம் வாயிலாக இதை அவர்கள் நேரடியாகச் செய்துகொள்ளலாம்.
மலேசியாவுக்குப் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இந்தப் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுகத் திட்டத்தை முன்னிட்டு சிறப்புச் சலுகைகளை ‘யூடிரிப்’ வழங்குகிறது.
அதன்படி, நான்கு வாரயிறுதிகளில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இலவச இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகை ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மே மாதம் 11ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இந்த இலவச இணைப்புப் பேருந்துச் சேவை காலை 9 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கு வழங்கப்படும்.
இதைப் பயன்படுத்தி கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள மிட் வேலி சவுத்கீ கடைத்தொகுதிக்குச் செல்லலாம்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்தில் உள்ள இடங்களை ‘யூடிரிப்’பின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் அல்லது டெலிகிராம் தளங்களில் உள்ள இணைப்புகள் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்லாது, குறைந்தது S$200க்கு நிகரான ரிங்கிட்டை ‘யுடிரிப்’ அட்டைமூலம் செலவு செய்யும் முதல் 5,000 பேருக்குச் செலவழிக்கப்படும் தொகையிலிருந்து 3 விழுக்காட்டு ரொக்கம் திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் ஆண்டுதோறும் US$10 பில்லியனுக்குமேல் மதிப்பில் பரிவர்த்தனைகளை ‘யுடிரிப்’ செயல்படுத்தியது.

