சிங்கப்பூரில் யூடியூப் பிரிமியம் சந்தா கட்டணம் உயர்வு

சிங்கப்பூரில் யூடியூப் பிரிமியம் சந்தா கட்டணம் உயர்வு

1 mins read
https://cnalifestyle.channelnewsasia.com/living/youtube-premium-singapore-price-increase-587756
fd37d804-22f7-460b-80c0-28ed9161bebe
சிறந்த சேவை, வசதிகளைத் தொடர்ந்து வழங்குவதற்காகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் கூறியது.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சிங்கப்பூரில் யூடியூப் பிரிமியம் சேவைக்கான சந்தா கட்டணம் உயர்த்தப்படுவதாக, சந்தாதாரர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிநபர் சந்தா கட்டணம் மாதம் $13.98ல் இருந்து $15.98ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒரே வீட்டில் ஆறு பேர் வரை பயன்படுத்தக்கூடிய குடும்பத் திட்டத்திற்கான கட்டணம் மாதம் S$27.98ல் இருந்து S$31.98ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த சேவை,வசதிகளைத் தொடர்ந்து வழங்குவதற்காகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் கூறியது.

“இந்த முடிவுகளை நாங்கள் எளிதாக எடுப்பதில்லை. ஆனால், பிரிமியம் சேவையை மேலும் மேம்படுத்தவும் யூடியூப்பில் நீங்கள் பார்க்கும் படைப்பாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்,” என யூடியூப் தெரிவித்தது.

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பும் இதேபோல் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது தனிநபர் கட்டணம் S$11.98ல் இருந்தும், குடும்பத் திட்டம் S$17.98ல் இருந்தும் உயர்த்தப்பட்டது.

சிங்கப்பூரில் யூடியூப் பிரிமியம் சந்தா மூலம் விளம்பரமில்லா ஒளிபரப்பு, பதிவிறக்க வசதி, யூடியூப் மியூசிக் சேவை ஆகியவற்றைப் பயனர்கள் பெறலாம். உலகளவில் தற்போது 125 மில்லியனுக்கும் அதிகமான யூடியூப் பிரிமியம் பயனர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்