சூரிய சக்தி ஆற்றலை பன்மடங்கு பெருக்க $5 மில்லியன் முதலீடு செய்யும் நிறுவனம்

1 mins read
21a05247-55cf-4a6a-b0b7-25d288d87f56
புலாவ் செராயா மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தியின் அளவை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் ஐந்து மடங்காக அதிகரிக்க ‘வொய்டிஎல் பவர் செராயா’ திட்டமிட்டுள்ளது. - படம்: வொய்டிஎல் பவர் செராயா

புலாவ் செராயா மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி அளவை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் ஐந்து மடங்காக அதிகரிக்க ‘வொய்டிஎல் பவர் செராயா’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய புலாவ் செராயா மின் நிலையத்தில் $5 மில்லியனுக்குமேல் முதலீடு செய்து சூரிய மின் சக்தி அளவை அதிகரிக்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

அதிகரிக்கப்படும் சூரிய சக்தி ஆற்றல், மாதத்திற்குச் சராசரியாக 417 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு அதிகத் திறன் கொண்டதாக இருக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.

இதன்மூலம் கிடைக்கப்பெரும் மின்சக்தி 1,000க்கும் மேற்பட்ட நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள் பயன்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட முதலீட்டையும் சேர்த்து, சூரிய சக்தியில் ‘வொய்டிஎல் பவர் செராயா’வின் மொத்த முதலீடு $6 மில்லியனுக்குமேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்