தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

1 mins read
a234271c-401a-4efb-be3a-06190759af9d
படன்: டுவிட்டர்/ யுவன் சங்கர் ராஜா -

சிங்கப்பூர் ரசிகர்களை இசைமழையில் நனைக்கவுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இதுகுறித்த அறிவிப்பை மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக சனிக்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்டது.

சிங்கப்பூரில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி படைக்கவுள்ளதாகவும் அது சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாகவும் மேஸ்ட்ரோ புரொடக்சன்ஸ் கூறியது.

நிகழ்ச்சி தொடர்பான மேல்விவரங்கள் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் அது தெரிவித்தது.

கடந்த மாதம் அந்நிறுவனம், இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்