You are here

சிங்க‌ப்பூர்

செயற்கை கருத்தரிப்பு முயற்சி தோல்வி; குட்டி பாண்டா இல்லை

பெண் பாண்டா கரடி ஜியா ஜியாவை செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் அண்மைய முயற்சி தோல்வியடைந்ததால் குட்டி பாண்டா கரடியைக் காண இன்னமும் பொறுமையாக காத் திருக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது. ஜியா ஜியாவும் அவளுடைய ஜோடியான காய் காய்க்கும் உதவ நான்காவது முறையாக செயற்கை கருத்தரிப்பு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. ஆனால் பலன் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று காய் காய்க்கு 11 வயது ஆனது. செப்டம்பர் 3ஆம் தேதி ஜியா ஜியாவுக்கு 10 வயதானது. இந்த நிலையில் இரு பாண்டாக் களும் வெள்ளிக்கிழமை அன்று ஜோடியாக பிறந்த நாளைக் கொண்டாடின.

தையல் கடைக்குள் புகுந்த கார்

சவுத் பிரிட்ஜ் சாலையில் இரு கார்கள் விபத்துக்குள்ளானதில் ஒரு கார் தையல் கடையில் புகுந்து விட்டது. இதில் காயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி அளவில் நிகழ்ந்த விபத்து குறித்து காவல்துறை மேல் விவரங் களை வெளியிடவில்லை. ஆனால் விசாரணை நடைபெற்று வருவ தாக அது கூறியது. சவுத் பிரிட்ஜ் சாலையை நோக்கிச்செல்லும் டெம்பிள் ஸ்திரீட் வழியாகச் சென்ற கார் வலது பக்கமாக திரும்ப முயற்சி செய்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பாதையை மறைத்துவிட்டது. இந்நிலையில் கார் ஓட்டுநர் தொடர்ந்து வலது பக்கமாக திரும் பினார்.

கடலில் 114 கிலோ குப்பையை அகற்றிய தொண்டூழியர்கள்

அனைத்துலகக் கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் கடலில் மிதந்த 114 கிலோ குப்பைகளை தொண்டூழி யர்கள் அகற்றினர். மூன்றாவது ஆண்டாக இவ் வாண்டு ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வில் நடைபெற்ற கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் 16 வயது முதல் 62 வயது வரை யிலான 150 தொண்டூழியர்கள் பங்கேற்றனர். இதில் சுகாதார, போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னும் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி னார்.

அன்வார்: பிரதமர் ஆனதும் சிங்கப்பூர் வருவேன்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையில் பிரச்சினைகள் இல்லை என்றும் தாம் பிரதமர் பதவி ஏற்றதும் முதலாவதாகச் செல்லக்கூடிய நாடுகளில் சிங்கப்பூரும் இருக்கும் என்றும் மலேசியாவின் பிகேஆர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடை பெற்ற சிங்கப்பூர் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரு அன்வார் உரை நிகழ்த் தினார். அப்போது சிங்கப்பூர்=மலே சியா இடையிலான உறவுகள் குறித்து முன்னைய நாடாளு மன்ற உறுப்பினர் ஸைனுல் அபிதீன் ர‌ஷீத் கேள்வி எழுப் பினார்.

மெக்டோனல்ஸ் உணவகத்தில் புகுந்து விளையாடிய எலி

அங் மோ கியோ ஹப் பின்னால் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத் தில் புதன்கிழமை மாலை தென் பட்ட எலி அகற்றப்பட்டுவிட்டதாக உணவகத்தின் பேச்சாளர் தெரி வித்துள்ளார். மேசைமேல் வைக்கப்பட்ட ‘ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்’ அருகில் எலி இங்கும் அங்குமாய் ஓடும் காணொளிக் காட்சி ஒன்று இணையத்தில் வலம்வந்த வண் ணம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.10 மணி வரையில் இக்காணொளி 27,200 முறை காணப்பட்டதாகவும் 1,500 முறைக்கு மேல் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் அறியப் படுகிறது.

பொங்கோலில் இரண்டு புதிய தொடக்கப்பள்ளிகள்

புதிய குடியிருப்பு வட்டாரமான பொங்கோலின் பள்ளி இடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 2020ஆம் ஆண்டில் இரு புதிய தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. வேலர் தொடக்கப்பள்ளி, நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டும் 2020ல் தொடக் கநிலை 1 மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அத்துடன் தற்போது புக்கிட் பாத்தோக்கில் உள்ள யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியும் 2021ல் பொங்கோல் வட்டாரத்துக்கு இடம் மாறவுள்ளது.

எடைக்குறைப்பு மருந்துக்கு எதிராக எச்சரிக்கை

உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுள்ளதால் ‘கெ லெ’ என்ற எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்ளவேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த எடைக்குறைப்பு மருந்து, பசியை அடக்கி உடல் எடையைக் குறைக்க வல்லது என்று இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் இம்மருந்தினை உட்கொண்டு 11 கிலோ குறைந்ததாக விளம்பரப்படுத்திய பெண் தன் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

கள்ள சிகரெட்: 152 பேர் சிக்கினர்

வரி செலுத்தாத சிகரெட்டுகள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துவிட்ட நிலையில், இதனை முடக்கும் முயற்சியில் இறங்கிய சிங்கப்பூர் சுங்கத்துறையினர் மூன்று நாள் நடத்திய சோதனையில் மொத்தம் 152 பேரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இவ்வாரத் தொடக்கத்தில் தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஜூரோங் போன்ற இடங்களில் உள்ள வர்த்தக வட்டாரங்கள், தொழில் பேட்டைகள், குடியிருப்பு வட்டாரங்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குமிடம் எனத் தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின்போது வரி செலுத்தாத சிகரெட்டுகளுடன் அந்நபர்கள் பிடிபட்டனர். இதில் சுமார் 170 வரி செலுத்தாத சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி மரணம்

நேற்று முன்தினம் இரவு சர்க்கியூட் சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் மோட்டார்சைக்கிள் மோதி 82 வயது மூதாட்டி உயிரிழந்தார். புளோக் 47 அருகில் விபத்து நிகழ்ந்தது குறித்து இரவு 9.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மூதாட்டியுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டிய 26 வயது ஆடவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மூதாட்டி காயங்களினால் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

துவாசில் புதிய தொழில்நுட்ப நிலையம்

மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் நுட்பங்களும் புத்தாக்க வர்த்தக முறைகளும் மருத்துவத் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன. தங்கள் நிறுவனத்தின் திறன் களை மட்டுமே நம்பி நிறுவனங்கள் தற்போது செயல்படுவதில்லை என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி, மேம்பாடுகளுக்குப் புதிய முறைகளை உருவாக் குவதற்குத் தனித்துவம் வாய்ந்த தொழில்துறைகளின் பங்குதாரர் கள் ஒத்துழைப்பு நல்குவதால் புத்தாக்கம் முக்கிய அம்சமாக விளங்கும் என்றார் அமைச்சர்.

Pages