தரமே அஸ்திவாரம், உலகளாவிய கண்ணோட்டம்

தரமே அஸ்திவாரம், உலகளாவிய கண்ணோட்டம்

3 mins read
-

இரு பங்காளிகளுடன் சேர்ந்து தெலொக் ஆயேர் பேசினில் சொந்த காப்பிக் கடையை 1936 தொடங்கி, லவ் பா சாட் உணவங்காடி நிலையத்திற்கு இடம்மாறி, சிறந்த சேவை வழி தம் வசம் வாடிக்கையாளர்களை ஈர்த்தார் அவர்.

இன்று அவரது பிள்ளைகள் தொழிலை நிர்வகித்து சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் வர்த்தகத்தை விரிவாக்கி வருகிறார்கள்.

இதே போன்று 'பெங்காவான் சோலோ' ஒரு சிறிய 'கேக்' கடையாக ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் 1979ஆம் ஆண்டில் துவக்கம் கண்டது.

கடை உரிமையாளரான திருமதி எனஸ்தே‌‌‌ஷிய லியூ 'கேக்'குகள், பாரம்பரிய குவே (kueh) பலகார வகைகள், இனிப்பு பாதார்த்தங்களின் தரம் உயர்வாக இருக்க வேண்டும், அதனைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.

-
-

சிங்கப்பூரின் ஆரம்பகாலத்திலிருந்து 1990கள் வரையில் தேநீர் விருந்து, பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களில், மலாய், சீன பெரானாக்கான் கலாசாரத்துடன் ஐக்கியமான 'குவே லாபிஸ்', வண்ண நிறங்களில் வரும் 'லபிஸ் சாகு' போன்ற குவே பலகார வகைகள் இடம்பெறும்.

இதுபோன்ற பாரம்பரிய குவே பலகார வகைகளை செய்யும் 'கேக்' கடைகளின் எண்ணிக்கை காலத்துடன் குறைந்துவிட்டாலும் 'பெங்காவான் சோலோ' குவே பலகார வகைகளை செய்வதில் முத்திரைப்பதித்து சிங்கப்பூரர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.

-
-

வெவ்வேறு கட்டண முறைகளும் 'யா குன்' திறன்பேசி செயலி வழி உணவு வாங்கும் முறையும் அறிமுகமாகியுள்ளது.

எப்போதும் புதுவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்வதில் நாட்டம் கொண்டுள்ள 'பெங்காவான் சோலோ' திருமண 'கேக்'குகளை தயாரிப்பதுடன் சிறுவர்களுக்கு பிடித்த 'ஃப்ரோசன்', போன்ற பிரபல கேலிச்சித்திர 'கார்ட்டூன்' கதாப்பாத்திரங்களின் படத்தை உள்ளடக்கும் 'கேக்'குகளையும் விற்கிறது.

மேலும், 'குவே தார்ட்', முந்திரிப்பருப்பு சுஜி குக்கிஸ் போன்ற பாரம்பரிய விழாக்கால பதார்த்தங்களை கவர்ச்சிமிகு அன்பளிப்பு பொட்டலங்களில் அது நிரப்புகிறது.

-
-

சிங்கப்பூர் உணவு அன்பளிப்பு என யோசிக்கும்போது மக்கள் மனதில் 'பெங்காவான் சோலோ' இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அது செயல்பட்டு வருகிறது.

தற்போது உணவு அன்பளிப்பு மற்றும் நினைவுப்பொருள் அன்பளிப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு, சீனப் பண்டிகை வரும்போது, அப்பண்டிக்கைக்கான பதார்த்தங்களை சிறப்பு அன்பளிப்பு பொட்டலங்களில் நிரப்பி, உலகெங்கும் சிங்கப்பூரின் மரபுடைமையை பரவச் செய்வது 'பெங்காவான் சோலோ'வின் இலக்காகும்.

"அன்பளிப்பு பொட்டலங்களில் இந்த உணவு பொருட்களின் வரலாறு, மரபுடைமை அம்சங்களை உள்ளடக்கியுள்ளோம். வெளிநாட்டு பொருட்களை பாராட்டும் மத்தியில், இளைய தலைமுறையினர் நமது மரபுடைமையையும் அறிந்துகொண்டு பெருமிதப்பட வேண்டும்," என்று சொன்னார் 'பெங்காவான் சோலோ'வின் இயக்குநர் திரு ஹென்ரி லியூ.

-
-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சிங்கப்பூர் 'பிரேண்ட்' அலுவலகமும் (Singapore Brand Office) சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தை செயல்படுத்தின.

உணவுத் துறையில் பெயர்பெற்ற 'யா குன் காயா டோஸ்ட்', 'பெங்காவான் சோலோ'வின் 'பேக்கேஜ்ட்' (packaged) பொட்டலங்களாக்கப்பட்ட உணவு பொருட்களில் இந்த பேரார்வத்துடன் செய்யப்பட்ட முத்திரை பதிக்கப்படும்.

இந்த முத்திரை கொண்டிருக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூருடனான வலுவான தொடர்பை எடுத்துக்காட்டுவதோடு தங்களது நிலையான பேரார்வத்தையும் வெளிகாட்டுகின்றன.

சிங்கப்பூர் உணர்வை வெளிப்படுத்தும் இந்த பேரார்வத்துடன் செய்யப்பட்ட முத்திரை கொண்ட உள்ளூர் பொருட்களை வாங்க விரும்புவோர், https://shopee.sg/m/mwpshopee என்ற இணையப் பக்கத்திற்கு செல்லலாம். இத்தளத்திலுள்ள பரிசுகள், இலவசப் பொருட்கள் ஆகிய விற்பனைச் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள மறவாதீர்.

பேரார்வத்துடன் செய்யப்பட்ட திட்டத்தில் இடம்பெறும் உள்ளூர் நிறுவனங்களைப் பற்றி ஆராய்ந்து அவர்களின் வரலாற்றுக் கதைகளைப் படித்து உற்சாகம் பெற www.visitsingapore.com/madewithpassion என்ற இணையப் பக்கத்திற்கு செல்லவும்.

அதோடு சமூக வலைத்தளப் பக்கங்களான https://www.instagram.com/madewithpassionsg/ மற்றும் https://www.facebook.com/MadeWithPassionSG ஆகியவற்றில் இது தொடர்பான விவரம் கிடைக்கும்.