இளையர் தந்த வாழ்க்கை வரம்

செல்வங்களில் தலையாயது மக்கட்பேறு. அப்படி வரமாக வந்த மகள் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்க, அருமை மகளை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற அவளின் பெற்றோர் நடத்திய பெரும் போராட்டத்திற்கு, முன்பின் அறிந்திராத இளையர் ஒருவர் தமது கல்லீரலைத் தானமாகத் தந்து கைகொடுத்துள்ளார்.

இன்­னும் இரண்டு வயதே ஆகாத ரியா தமக்கு யார் என்றே தெரி­யா­த­போ­தும் அரி­ய­வகை நோயால் போராடி வந்த அவ­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்ற எண்­ணம் மட்­டுமே சக்­தி­பா­லன் பால தண்­டா­யு­தத்­தின் சிந்­த­னை­யில் ஓடி­யது. சற்­றும் தாம­தி­யாது, ரியா குறித்து தாம் அறிந்த அந்த நாளே அவ­ளுக்­குத் தமது கல்­லீ­ர­லைத் தான­மாக வழங்க முன்­வந்­தார் 28 வய­தான சக்­தி­பா­லன்.

நல்வாய்ப்பாக, அவரது கல்லீரலும் ரியாவிற்குப் பொருத்தமானது என மருத்துவச் சோதனையில் தெரியவர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, இப்போது குழந்தை ரியாவும் தானமளித்த திரு சக்தியும் நலமாக உள்ளனர்.

பிறந்து 40 நாள்களிலேயே பத்து மணி நேர அறுவை சிகிச்சை

மணவாழ்வில் நுழைந்த ஜெ.சுனில், 31 - ச. ருத்ரா, 30, தம்பதியருக்கு அன்புப் பரிசாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழகு தேவதை ரியா பிறந்தாள்.

பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இயல்பு. அதன் தொடர்பில் பலதுறை மருந்தகத்திற்கு மூன்று வாரங்களாக ரியாவை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

மஞ்­சள் காமாலை தொடர்ந்து நீடிக்­கவே, தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டாள் அந்­தக் கைக்­கு­ழந்தை.

அங்கு சில மருத்­து­வச் சோத­னை­களுக்­குப் பிறகு, ரியா­வுக்கு பித்த நாள அடைப்பு (பிலி­யரி அட்­ரீ­சியா) எனும் அரி­ய­வகை கல்­லீ­ரல் நோய் இருப்­பது தெரி­ய­வந்­தது.

கைக்­கு­ழந்­தை­கள் அந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டால், கல்­லீ­ர­லிலுள்ள பித்த நாளங்­கள் அழன்று, அடைப்பு ஏற்­பட்டு, அத­னால் பித்­த­நீர் பித்­தப்­பைக்­குச் செல்­வது தடை­படும். நாள­டை­வில் கல்­லீ­ரலே செய­லி­ழந்­து­விட வாய்ப்­புண்டு.

இத­னால், பிறந்த 40 நாள்­க­ளி­லேயே பித்­த­நீர் ஓட்­டத்­தைச் சீராக்க ரியா­விற்கு 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. பிள்­ளைப்­பேறு கிட்­டிய மகிழ்ச்­சி­யில் திளைத்த பெற்­றோர்­, பிஞ்­சுக்­கு­ழந்­தை­யின் உட­லில் சிகிச்­சைக்­கா­கக் குழாய்­கள் பொருத்­தப்­படும் காட்­சி­க­ளைக் கண்டு மனம் க­லங்­கிப் போயி­னர்.

அறுவை சிகிச்சை முடிந்­த­பின்­னும் நிம்­ம­தி­யில்லை. ஏனெ­னில், அறுவை சிகிச்­சை­யால் பித்­த­நீர் ஓட்­டத்தை ஓர­ளவு மட்­டுமே சீராக்க முடிந்­தது என்­றும் நீண்­ட­கா­லத் தீர்­வாக கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்சை ரியா­வுக்கு தேவைப்­படும் என்­றும் மருத்­து­வர்­கள் கூறினர்.

தானம் தரத் தயாரான தந்தை

கடந்­தாண்டு தொடக்­கத்­தில் தம் மக­ளுக்­குத் தாமே கல்­லீ­ரல் தானம் அளிப்­பது என்று திரு சுனில் முடிவு செய்­தார்.

கல்­லீ­ரல் ரியா­விற்­குப் பொருத்­த­மாக இருக்­கும் சாத்­தி­யத்தை அதி­க­ரிக்க, தமது உடல் எடை­யைக் குறைக்க வேண்­டும் என்று திரு சுனி­லி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, முறை­யாக உணவுண்டு, உடற்­ப­யிற்சி செய்து, ஆறு மாதங்­களில் 12 கிலோ எடை குறைத்து, கல்­லீ­ரல் பொருத்­தச் சோத­னைக்கு சென்­றார் ஆய்­வக அதி­கா­ரி­யா­கப் பணி­ புரியும் திரு சுனில்.

ஒரே இரத்தப் பிரிவு என்பதால் தமது கல்லீரல் ரியாவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த திரு சுனிலுக்கு ஏமாற்றம்.

தமது கல்லீரல் பொருத்தமில்லை என்று திரு சுனிலிடம் 2020 ஜூன் மாதம் தெரிவிக்கப்பட, உடனடியாக சமூக வலைத்தளங்களில் ரியாவின் மருத்துவப் பிரச்சினைகளை பகிர்ந்து, கல்லீரல் தானம் செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வசந்­தம் கலை­ஞர்­களும் இத்­தே­டல் முயற்­சிக்கு ஆத­ர­வாக திரு சுனி­லின் குடும்­பத்­தைக் காணொ­ளி­வழி நேர்­கண்டு, அதனைச் சமூக ஊட­கங்­களில் பதி­வேற்றி, பர­வச் செய்­த­னர்.

ஆர்வம் தெரிவித்த 99 பேர்

அதன்பின் மூன்று வாரங்­களுக்­குள் சிங்­கப்­பூ­ரில் மட்­டும் கிட்­டத்­தட்ட 99 பேர் ரியா­வுக்கு கல்­லீ­ரல் தானமளிக்க ஆர்­வம் தெரி­வித்தனர்.

அவர்களில் இருந்து ஆரோக்­கி­ய­மா­ன­வர்­களைக் கண்­ட­றி­யும் முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார் திரு சுனில். அடுத்­த­தாக, அவர்­க­ளுக்கு மருத்­து­வச் சோதனை செய்ய வேண்டி இருந்­தது.

ஒரு­வ­ரது சோத­னைக்கு திரு சுனில் சரா­ச­ரி­யாக $2,500 செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.

அதை­ய­டுத்து, அடுத்து மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த கல்­லீ­ரல் மாற்று சிகிச்­சைக்கு ‘கிவ் ஏஷியா’ இணை­யத்­த­ளத்­தின் வ­ழி­யாக இரண்டு வாரத்­திற்­குள் $55,000 நிதி திரட்டப்பட்டது.

மூன்று மாதத் தேட­லில், கிட்­டத்­தட்ட பத்­துப் பேரைச் சோதித்­த­தில், ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் துணைத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றும் திரு சக்­தி­யின் கல்­லீ­ரல் ரியா­விற்­குப் பொருத்­த­மா­னது எனத் தெரி­ய­வந்­தது.

“சிகிச்­சைக்­கு­முன், யார் தானம் செய்­யப்­போ­கி­றார் என்ற தக­வல் பகி­ரப்­ப­டாது. ரியா­வும் தானம் செய்­ப­வ­ரும் சிகிச்­சையை வெற்­றி­க­ரமாக கடந்து வர­வேண்­டும் என்று குடும்­பமே பிராத்­தித்­தோம்,” என்றார் அர­சாங்க ஊழி­யரான திரு­மதி ருத்ரா.

2020 செப்­டம்­பர் 30ஆம் தேதி திரு சக்­தி­யின் கல்­லீ­ர­லில் இருந்து 23% வெட்டி எடுக்­கப்­பட்டு, ரியா­விற்­குப் பொருத்­தப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னை­யி­ல் இருந்து நான்கு நாள்­களில் வீடு திரும்­பிய திரு சக்தி, மூன்று மாதங்­களில் தமது வழக்­க­மான நட­வ­டிக்­கை­களைத் தொடங்­கி­விட்­டார். குழந்தை ரியா­வும் சீரா­கக் குண­ம­டைந்து வரு­கி­றாள்.

இப்போது திரு சக்தியும் அந்தக் குடும்பத்தில் ஒருவர்போல் ஆகிவிட்டார்.

இறந்­த­பின் தங்­க­ளது உறுப்­பு­க­ளைத் தானம் செய்ய முன்­வந்­துள்ள சுனில்-ருத்ரா தம்­பதி, பிற­ரும் அவ்­வாறே செய்­வர் என நம்­பு­கின்­ற­னர்.

===============================================================================================================================================================

மனித உறுப்பு மாற்றுச் சட்டம்

மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தின்கீழ், ஒருவர் இறந்த பிறகு, அவரின் கல்லீரல், இதயம், சிறுநீரகம், விழிவெண்படலம் (cornea) போன்றவை உடலிலிருந்து அகற்றப்பட்டு, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம்.

இச்சட்டம் 21 வயதும் அதற்கு மேற்பட்ட, மனநோய் இல்லாத அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் பொருந்தும்.

அவர்கள் இத்திட்டத்தில் தானாகவே சேர்க்கப் படுவர். அதிலிருந்து விலக விரும்பினால் அதற்குரிய படிவத்தை தேசிய உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

இந்தச் சட்டம் நடப்பில் இருந்தாலும், இறந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் பெறுவது குறைவாகவே உள்ளது. இதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் இறப்பதற்கு முன், அதுகுறித்த விருப்பத் தெரிவுகளை நெருக்கமானவர்களிடம் பகிராமல் போய் இருந்தால், தானம் செய்ய முன்வராததற்கு குடும்பத்தினர் காரணங்களைக் கூறலாம்.

===============================================================================================================================================================

பித்த நாள அடைப்பும் கல்லீரல் தானமும் - விளக்கம்

பித்த நாள அடைப்பு (Biliary Atresia) நோயுடன் பிறக்கும் குழந்தைகள் தொடக்கத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் மஞ்சள் காமாலை நோய் அதற்கான முதல் அறிகுறியாகத் தென்படும். குழந்தைக்கு இரு வாரங்களுக்கு மேல் மஞ்சள் காமாலை நீடித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். குழந்தைகளின் மல நிறத்தையும் கண்காணிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும். மலம் வெள்ளையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அத்துடன், சிறுநீரும் கறுமை நிறத்தில் இருக்கும்.

ஓராண்டில் சிங்கப்பூரில் எத்தனை குழந்தைகள் பித்த நாள அடைப்பால் பாதிக்கப்படுகின்றன? பெண் பிள்ளைகளை இந்நோய் அதிகம் பாதிக்குமா?

சிங்கப்பூரின் சராசரி பிறப்பு விகிதத்தைக் கருத்தில்கொள்ளும்போது ஆண்டுதோறும் சராசரியாக மூன்று குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன எனக் கூறலாம். ஆண் குழந்தைகளைவிட பெண் பிள்ளைகளை இது அதிகம் தாக்கக்கூடும் எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான இடர் மதிப்பீடு (risk assessment) எப்படிச் செய்யப்படுகிறது? அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்பு எப்படி?

சிறுநீர், ஊடுகதிர்ப் பரிசோதனை எனப் பல சோதனைகளுக்குப் பிறகே குழந்தைகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர். உலகளவிலான புள்ளிவிவரங்களைக் காண்கையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஓர் ஆண்டிற்குப் பிறகான காலத்தில் 90% நிலைத்திருக்கும் விகிதம் புலப்படுகிறது. சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மட்டுமே சிறாருக்கான கல்லீரல் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

கல்லீரல் தானம் செய்ய முன்வருபவர் எத்தகைய மருத்துவச் சோதனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும்?

♦ தானம் செய்ய முன்வருபவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும்.

♦ 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

♦ அவரின் மருத்துவ வரலாறு ஆராயப் படும். அடிப்படை உடல் சோதனைக்குப் பிறகு இரத்தம், ‘இசிஜி’, மார்பு ஊடுகதிர், ‘சிடி’, ‘எம்ஆர்ஐ’ ஆகிய சோதனைகளுக்கு அவர் உட்பட வேண்டும்.

♦ அவருக்கு உளவியல்-சமூக மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

♦ தானம் தரப் பொருத்தமானவர் என அறியப்பட்டால், சிகிச்சையைத் தொடர அறநெறிக் குழுவிடம் அனுமதி கோரப்படும்.

♦ உறுப்புக் கொடைக்குப் பின், அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப் படுவார். மருத்துவமனையில் மூன்று முதல் ஆறு நாள்களுக்கு அவர் இருப்பார். நான்கில் இருந்து ஆறு வாரங்களில் அவர் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

தானம் செய்பவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? கல்லீரல் செயல்பாடு முன்னிருந்த நிலைக்குத் திரும்புமா?

எல்லா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலும் சிறிய அளவிலான இழப்பு அபாயம் உள்ளது. இதில் 0.3% இழப்பு அபாயம் இருக்கிறது. தானம் செய்தவரின் கல்லீரல் இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் மீளுருவாக்கம் காணும். ஒரு மாதத்திற்குள் கல்லீரல் வழக்கமான செயல்பாட்டிற்குத் திரும்பும்.

விளக்கம்: தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ்.வெங்கடே‌ஷ் கார்த்திக், மூத்த மருத்துவ ஆலோசகரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ஸ்ரீதர் ஐயர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!