மறுவாழ்வுக்கு ‘ஆஷ்ரம்’, கைதூக்கிவிட ‘நெஞ்சார்ந்த அன்பளிப்பு’

இந்து அறக்கட்டளை வாரியம் தனது செயல்பாட்டு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்
களைச் செய்திருக்கிறது. கல்வி, சமுதாய, நல்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ள வாரியத்தை அதிகம் ஊக்குவிக்கும் விதமாக 2010ஆம் ஆண்டில் இந்து அறக்கட்டளை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தம், சமூகத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை விரிவான அளவில் மேற்கொள்ள வாரியத்திற்கு வழியமைத்துக் கொடுத்தது. ஆண்டுதோறும் சமூகப் பணிகளுக்காக கிட்டத்தட்ட $1 மில்லியன் தொகையை வாரியம் செலவிட்டு வருகிறது.

போதையர் மறுவாழ்வு இல்லம்

போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் 1999ஆம் ஆண்டில் ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லம் ஏற்படுத்தப்பட்டது.இலாப நோக்கமில்லாப் பொது நல அமைப்பு என்பதால் இந்த இல்லத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரிக் கழிவு ரசீதுகள் அளிக்கப்படுகின்றன.

இந்த இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல், உணர்வுபூர்வ ஆதரவு ஆகியவற்றுடன் வேலை தேடிக்கொள்ள ஏதுவாக தொழில் திறன்களும் கற்றுத்தரப்படுகின்றன.‘ஸ்கோர்’ எனப்படும் சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில்கள் கூட்டு நிறுவனத்தின்மூலம் இல்லவாசிகளுக்குப் பொருத்தமான வேலைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

வசதி குறைந்தோருக்கு உதவி

2009ஆம் ஆண்டில் பொருளியல் மந்தநிலை ஏற்பட்டபோது வேலை இழந்தவர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். அந்தத் தருணத்தில், அவர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் அவர்களுக்கு மாதந்தோறும் மளிகை, உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்கு என ‘நெஞ்சார்ந்த அன்பளிப்பு’ திட்டம் தொடங்கப்பட்டது.
ஆலயங்கள், பாலர் பள்ளிகள், குடும்ப சேவை நிலையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் இருந்து அந்தக் குடும்பங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் ஒரு மாதத்திற்குத் தேவையான சர்க்கரை, மைலோ பானத் தூள், உப்பு, எண்ணெய், இறைச்சி மசாலாத் தூள், புழுங்கல் அரிசி போன்ற மளிகைப் பொருட்கள் இருக்கும்.

அன்பளிப்புப் பையில் என்னென்ன பொருட்கள் இடம்பெற வேண்டும் என்பதை ஆய்வு வழியாக ஆஷ்ரம் அவ்வப்போது மறுஆய்வு செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தின்மூலம் பலன்பெறும் குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய தொண்டூழியர்கள் உதவுகின்றனர்.

‘ஆஷ்ரம்’ இல்லத்திற்கு அதிக நன்கொடை தேவைப்படுகிறது. இதற்கான படிவம் www.heb.org.sg இணையத்தளத்தில் உள்ளது.

மேல் விவரத்திற்கு: 6753 9730.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!