முற்றுப்பெறாத ‘பச்சை’ மோகம்

பதின்ம வயதிலிருந்தே பச்சை குத்திக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த ராஜீவ், ஓய்வுபெற்ற மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகரு

மான டுவைன் ஜான்சனின் உடலில் உள்ள வடிவம் போன்று தமது உடலிலும் குத்திக்கொண்டார்.

பச்சை குத்திக்கொள்பவர்கள் மீது அவரது தாயாருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே பச்சை குத்திக்கொள்வார்கள் என்பது அவரது கருத்து. அம்மாவுக்குத் தெரியாமல் தனது 21வது வயதில் முதன்முறையாக பச்சை குத்திக்கொண்டார் ராஜீவ்.

அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து மறைத்து அவர் பாதுகாத்த பச்சை, ஒருநாள் அவர் கண்ணில் பட்டுவிட்டது. அம்மாவிடம் திட்டு வாங்கினார். ஆனால் ராஜீவ் சீரான வாழ்க்கையும் மாறாத நற்குணங்களும் பச்சை குத்திக் கொள்வது குறித்த அவரது அம்மாவின் கருத்தை மாற்றியது.

“எனினும் தீய பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் மட்டுமே பச்சை குத்திக்கொள்வார்கள் என்ற எண்ணம் இன்னும் சிலருக்கு உள்ளது. அவர்கள் என் உடலிலுள்ள பச்சையைப் பார்த்து அதிர்ச்சி அடைவதுண்டு,” என்றார் சேவை தொழில்நுட்பராக பணிபுரியும் திரு ராஜீவ், 28.

வேலை கிடைக்காது

பச்சை குத்திக்கொண்டால் சிங்கப்பூரில் எந்த வேலையும் கிடைக்காது என்கிற மனப்போக்கை கொண்டுள்ள சிலர், அதை ஒரு காரணமாக கருதி பிள்ளைகள் அல்லது குடும்பத்தினரைப் பச்சை குத்திக்கொள்ளவிடாமல் தடுப்பது இக்காலச் சூழலுக்கு பொருந்தாது என்கிறார் திரு தர்மேந்திரன்.

தமது 17 வயதில் முதன்முறையாக ஒரு பெண் வடிவத்தைத் தொடையில் பச்சை குத்திக்கொண்டார் திரு தர்மேந்திரன். பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இளையர்கள் மத்தியில் அப்போது பிரபலமாக இருந்ததால் அவரும் குத்திக்கொண்டார்.

பச்சை குத்திக்கொண்டால் உறவினர்கள் மத்தியில் குடும்பத்திற்கு மரியாதை இருக்காது. வேலை கிடைக்காது. ் ‘ரவுடி’ என்று அழைப்பார்கள் போன்ற காரணங்களைக் கூறி திரு தர்மேந்திரனின் தாயார் அவரைத் தடுத்தார். இருப்பினும், தம்முடைய திறமையைப் பொறுத்துதான் வேலை வாய்ப்பு கிட்டும் என்று நம்பிய திரு தர்மேந்திரன், பச்சை குத்திக்கொண்டார்.

“வேலை கிடைத்த பிறகுதான் பச்சை குத்திக்கொண்டதைப் பற்றி அம்மாவிடம் சொன்னேன். அம்மா ஆச்சரியப்பட்டார். அவர் கருத்து அதன்பிறகு மாறிவிட்டது” என்று தம்முடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் கட்டுமானத் துறையில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணிபுரியும் தர்மேந்திரன், 38.

பெண்களுக்கே எதிர்ப்பு அதிகம்

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் பச்சை குத்திக்கொள்வதில் அதிக எதிர்ப்பு உள்ளதென கூறும் திருமதி அனிதா சுகுமார், 35, அந்த எண்ணத்தை இந்திய சமூகத்தினரிடையே முறியடிக்கும் வகையில் தமது உடலின் பல பாகங்களில் பச்சை குத்திக்கொண்டார்.

‘‘பச்சை குத்திக்கொண்ட பெண்கள், ஒரு குடும்பத்தைப் பொறுப்பாக நடத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்று பலர் புறம்பேசியதை நான் கேட்டிருக்கிறேன். பச்சை குத்திக்கொள்பவர்களை அவர்கள் கீழ்த்தரமாக பார்ப்பார்கள்.

“பச்சை குத்திக்கொண்டது குறித்து எவராது என்னிடம் கேட்டால், ஒரு சின்ன புன்முறுவலுடன் அந்த இடத்தைவிட்டு சென்றுவிடுவேன். நாளடைவில் அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதைத் தவிர்த்து விடுவார்கள். என் வேலையையும் குடும்ப பொறுப்புகளையும் செவ்வனே செய்து வருவதுடன் எனது கணவருக்கு நல்ல மனைவியாக இருக்கிறேன். இதுவே பலருக்கு பதிலாக உள்ளது,’’ என்றார் செயல்பாட்டு ஆதரவு அதிகாரியான திருமதி அனிதா.

அன்பைப் பிரதிபலிக்கும் பச்சை

சீன நாள்காட்டிபடி, கடல்நாக ஆண்டில் தாம் பிறந்ததால் அதை பிரதிபலிக்க தமது வலது தோலில் ஒரு கடல்நாகத்தை பச்சை குத்திக்கொண்டார் திருமதி ஹேமலதா, 43.

நெற்றி, விரல், தொடை, கணுக்கால் போன்ற பல உடல் பாகங்களில் பச்சை குத்திக்கொண்டிருந்தபோதும் அது தமது வேலையைப் பாதித்ததில்லை என்றார் அவர்.

‘‘20 வயதில் ‘ட்ரைபல்’ வடிவத்துடன் எனது தாயாரின் அன்பைக் குறிக்கும் ஒரு கவிதையையும் எனது தொடையில் பச்சை குத்திக்கொண்டேன். அதைப் பார்த்த எனது தாயார் கோபப்பட்டார்.

“இந்தியர்கள் யாராவது பார்த்து கீழ்த்தரமாக நினைத்து விடுவார்கள் என்று பயந்து, என்னை அரைக்கால் சட்டையை அவர் அணியவிடவில்லை. பச்சை குத்திக்கொண்டால் எனக்கு வேலை கிடைக்காது என்று எண்ணி பலமுறை கவலையுற்றிருக்கிறார். என்மீது தவறான அபிப்பிராயம் உண்டாகுமோ என்று அவர் வருத்தப்பட்டார்.

“தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நிதிப் பிரிவில் பணிபுரிவதைப் பார்த்து பெருமைப்படும் எனது தாயார், பச்சை குத்திக்கொள்பவர்கள் பற்றிய தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்,’’ என்றார் திருமதி ஹேமலதா.

வேலை காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். இதுவரை யாரும் தமது உடலில் உள்ள பச்சை வடிவங்களைக் கண்டு தமது திறமையை எடைபோட்டதில்லை என்றார் அவர்.

கணவர் பெயரைப் பச்சை குத்திக் கொள்வது அன்று சர்வசாதாரணம்

அந்தக் காலத்தில் பொதுவாக கம்பத்தில் வசித்த தமிழர்கள் பச்சை குத்திக்கொண்டதாக குறிப்பிட்டார் 95 வயது திருவாட்டி முத்துலட்சுமி.

“அந்த காலத்தில் பெண்கள் கூட தங்களது கணவர்களின் பெயரை பச்சை குத்திக்கொள்வார்கள். அப்போது அது ஒரு பெரிய விஷயமாக கருதப்படாது.

“ஆனால் இக்காலத்து பெண்கள் பச்சை குத்திக்கொள்ளும்போது ‘ரௌடி மாதிரி’ உள்ளதென மற்றவர்கள் கூறுவார்கள். ஏனென்று தெரியவில்லை ஆனால் அப்படி கூறுபவர்களில் நானும் ஒருவர்,” என்று பச்சை குத்திக்கொள்வது குறித்த சமுதாயத்தின் கண்ணோட்டம் காலப்போக்கில் அவரது கருத்தையும் மாற்றியதாக திருவாட்டி முத்துலட்சுமி கூறினார்.

1970களில் குண்டர்கும்பலின் அடையாளமான பச்சை

தமது சீன நண்பர்கள் பச்சை குத்தி கொள்ள முடிவு செய்தபோது தாமும் கையிலும் நெஞ்சிலும் பச்சை கொண்டார் 63 வயது திரு மாரியப்பன்.

“எனது குடும்பத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பச்சை குத்தியுள்ளனர். உடலை அழகாக காட்டுவது, குண்டர் கும்பலை பிரதிநிதிப்பது, முரட்டுத்தனமாக காட்டிக்கொள்வது என பல காரணங்களுக்காக எனது சகோதரர்கள் பச்சை குத்திக்கொண்டுள்ளனர்.

“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் அதிகமான குண்டர் கும்பல், சண்டை சச்சரவுகள் இருந்ததால் அதில் உள்ளவர்கள் பச்சை குத்திக்கொள்வதை பற்றி கேட்பதற்கு நிறைய பேருக்கு தைரியம் இருக்காது. அதனால் எனது உறவினர்களும் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டதில்லை,” என்று பச்சை குத்தும் கலாசாரம் எழுபதுகளில் எப்படி மக்களால் பாரக்கப்பட்டது என விளக்கினார் திரு மாரியப்பன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!