முதல் இணையத் தேர்தலும் பாடங்களும்

முதல் இணையத் தேர்தலும் பாடங்களும்

8 mins read
f11cff0a-598d-4b9b-a671-e66a87876d6f
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஆல்வின் டான் (இடது), முகம்மது ஷாரெல் தாஹா (வலது) ஆகிய மசெகவின் இரு புதிய வேட்பாளர்களுடன், 'ஸ்ட்ரெய்ட்ஸ் டாக்' என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். திருவாட்டி வோன்னி சான் (இடமிருந்து இரண்டாவது) நடத்திய இந்நிகழ்ச்சி, வேலை, வீட்டு வசதி மேம்பாடு போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. படம்: மக்கள் செயல் கட்சி -
multi-img1 of 2

சிங்கப்பூரில் ஜூலை 10 ஆம் தேதி நடந்து முடிந்த 2020 பொதுத்தேர்தல் முதன் முதலாக பல புதுமைகளைக் கண்டது.

ஆக அதிக அரசியல் கட்சிகள்- அதாவது 11 கட்சிகள் களம் கண்டன. வரலாற்றில் முதல் தடவையாக ஓர் எதிர்க்கட்சி இரண்டு குழுத் தொகுதிகளைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் 10 இடங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டது.

இதைவிட குறிப்பிடும்படியாகச் சொல்ல வேண்டுமானால், வழக்கமான தேர்தல் பொதுக்கூட்டங்கள் இல்லாத முதல் தேர்தல் இதுதான்.

இவை எல்லாவற்றையும்விட, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தலைவர்களும் பிரசார பிரமுகர்களும் வாக்காளர்களும் முற்றிலும் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சார்ந்திருந்து சாதித்து முடித்த முதலாவது தேர்தல் இதுதான்.

இந்தத் தேர்தல் பல பாடங்களைப் போதிக்கிறது. இணைய ஈடுபாடு, நம்பகத்தன்மை எல்லாம் இதில் உயிர்நாடியானவை. ஆனாலும் அவை எல்லாம் எப்போதுமே வாக்குகளாக மாறும் என்று சொல்லிவிட முடியாது...

பொதுத் தேர்­தல் என்­றால் பொதுக் கூட்­டம் இருக்­கும். கட்சித் தொண்­டர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் பொது­மக்­களும் அத்­த­கைய கூட்­டங்­க­ளுக்­குத் திரண்டு வரு­வார்­கள். வேட்­பா­ளர்­கள், கட்­சித் தலை­வர்­கள் எல்­லா­ரும் கார­சா­ர­மா­கப் பேசி தங்­க­ளுக்கு ஆத­ரவு திரட்­டு­வார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் அண்­மைய காலம் வரை இப்­ப­டித்­தான் பொதுத் தேர்­தல் நடந்து வந்­தது. ஆனால் இம்­மா­தம் 10ஆம் தேதி நடந்த 14வது நாடாளுமன்­றத் தேர்­தல் பொதுக்­கூட்­டங்­கள் இல்­லா­மல் இணை­யம், சமூக ஊட­கங்­கள் ஆதிக்­கம் செலுத்­திய புரட்­சித் தேர்­த­லாக நடந்­தே­றி­யது.

சிங்­கப்­பூ­ரில் முற்­றி­லும் இணை­யத்­தைச் சார்ந்து நடந்த முதல் பொதுத் தேர்­தல் இது­தான் என்று வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள். தேர்­த­லில் போட்­டி­யிட்ட 11 அர­சி­யல் கட்­சி­களும் அவற்­றின் வேட்­பா­ளர்­களும் இணை­யம் வழி பிர­சா­ரம் செய்தனர்.

சில அர­சி­யல்­வா­தி­க­ளைப் பொறுத்­த­வரை­யில் பொதுக் கூட்­டம் போன்­றவை எல்­லாம் தேவை­யில்லை என்று கூட நினைக்­கத் தோன்­றி­யது. இன்ஸ்­ட­கி­ராமில் ஒவ்­வொரு பதி­வின் மூலம் 12,000 பேரை எட்­டி­ய சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் டான் செங் போக் இதற்கு ஓர் எடுத்­துக்­காட்டு.

இணை­யப் பிர­சா­ரம் எதிர்த்­த­ரப்­பு­களுக்கு நன்மை பயத்­த­தாக கண்­கா­ணிப்­பா­ளர்­கள் சிலர் வாதா­டு­கி­றார்­கள்.

வாக்­கா­ளர்­கள் பல­ரை­யும் பொறுத்­த­வரை­யில் தங்­க­ளு­டைய கட்­சி­களை, வேட்­பா­ளர்­களை, கொள்­கை­க­ளைத் தெரிந்­து­கொள்ள இணை­யம்தான் வழி­யாக இருந்­தது என்­கி­றார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சட்­டப் பள்­ளி­ இணைப் பேரா­சி­ரி­யர் இயூ­ஜின் டான்.

எல்லா கட்சிகளும்...

பொதுக் கூட்­டத்­திற்­குப் பதி­லாக மக்கள் செயல் கட்சி, பட்­டா­ளிக் கட்சி போன்ற கட்­சி­கள் வாக்­கா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­களை அரங்­கேற்­றின. இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் தேர்­தல் பொதுக் கூட்­டங்­க­ளை­விட அறி­வு­பூர்­வ­மான முறை­யில் இருந்­தன என்­கி­றார் பேரா­சி­ரி­யர் டான்.

சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்சி, மக்­கள் குரல் கட்சி ஆகி­யவை தங்­கள் ஃபேஸ்புக் பக்­கங்­களில் வேட்­பா­ளர்­க­ளின் உரை­களைப் பதி­வேற்­றின. 11 கட்­சி­களும் இணை­யம் வழி பேர­ணி­களை நடத்­தின.

தொகுதி நிலை­யி­லான அர­சி­யல் ஒளி­பரப்­பு­களில் அவை பங்­கெ­டுத்­துக்­கொண்­டன. இவை எல்­லாம் அர­சி­யல் கட்­சி­க­ளின் எண்­ணங்­கள் பற்றி வாக்­கா­ளர்­ க­ளுக்­குத் தெளி­வான ஒரு சிந்­த­னை­யைக் கொடுத்­த­தாக முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லிம் சன் சன் கூறு­கி­றார்.

கடந்த காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது அதிக அர­சி­யல் கட்­சி­க­ளைச் சேர்ந்த வேட்­பா­ளர்­க­ளின் குரல்­க­ளைக் கேட்­ப­தற்கு இணை­யம் வழி­வ­குத்­த­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக தொடர்பு மற்­றும் புதிய ஊட­கத் துறை­யைச் சேர்ந்த மூத்த விரி­வு­ரை­யா­ளர் டாக்­டர் நட்­டாலி பாங் தெரி­விக்­கி­றார்.

இருந்­தா­லும் அள­வுக்கு அதிக தகவல்கள் குவிந்­த­தால் இணை­யத்­தில் எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளின் விவா­திப்பு­களை­யும் செவி­ம­டுக்க முடி­யா­மல் இணை­யப் புழங்கி­கள் தடு­மா­றி­விட்­ட­தாக தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சமூ­க­வி­யல் அறி­ஞர் டான் எர்ன் செர் தெரி­வித்­தார்.

பல முதி­ய­வர்­கள் இணை­யத் தொழில்­நுட்­பத்தை அறி­யா­த­வர்­கள் என்­பதால் மூத்த வாக்­கா­ளர்­கள் போன்ற சமூ­கத்­தின் சில பிரி­வி­னரை ஈடு­ப­டுத்த அர­சி­யல் கட்சி­கள் தவ­றி­விட்­ட­தாக சிம் குளோ­பல் எஜு­கே­ஷன் என்ற கல்வி நிறு­வ­னத்­தில் துணை விரி­வு­ரை­யா­ள­ராக இருக்­கும் டாக்­டர் ஃபிளிக்ஸ் டான் கூறு­கி­றார்.

என்­ன­தான் இணை­யம் வழி பிர­சா­ரம் செய்­தா­லும் அர­சி­யல் கட்­சி­கள் பொதுக் கூட்­டம் போல் வாக்­கா­ளர்­க­ளு­டன் உணர்­வு­பூர்­வ­மா­கத் தொடர்­பு­கொள்ள முடி­யாது என்று வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

இது இணை­யம் வழி தேர்­தலை நடத்து­வ­தில் உள்ள குறைபாடு என்று அவர்­கள் கரு­து­கி­றார்­கள்.

பொதுக் கூட்­டங்­களில் அர­சி­யல் கட்சிகள் நன்­கொடை திரட்­டு­வ­தும் உண்டு. இந்த வாய்ப்பு இணையத் தேர்­தல்­களில் இல்­லா­மல் போய்­வி­டு­கிறது என்­கி­றார் பேரா­சி­ரி­யர் இயூ­ஜின் டான்.

இணை­யப் பிர­சா­ரத்­தை­விட தேர்­தல் பொதுக் கூட்­டங்­கள் கார­சா­ர­மா­னவை என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த வீ கிம் வீ தொடர்பு தக­வல் பள்ளி பேரா­சி­ரி­யர் ஆங் பெங் ஹுவா தெரி­வித்­தார்.

எதிர்த்­த­ரப்பு வேட்­பா­ளர்­கள் நடத்­தும் பொதுக் கூட்­டங்­களில் அதிக அள­வில் மக்­கள் திரள்­வர். அவர்­களி­டம் உணர்ச்சி­வசமா­கப் பேசி வாக்கு­க­ளைத் தங்­கள் பக்­கம் ஈர்க்­கும் ஓர் அனு­கூ­லம் எதிர்த்­த­ரப்­புக்கு இருந்­தது என்று இவர் கூறு­கிறார்.

இதை ஏற்­றுக்­கொண்ட பேரா­சி­ரி­யர் இயூ­ஜின் டான், பொதுக் கூட்­டங்­கள் நடந்­தி­ருந்­தால் கடு­மை­யான போட்டி இருந்த சில தொகு­தி­களில் முடிவு வேறு மாதி­ரி­யாக இருந்­தி­ருக்­க­லாம் என்றார்.

காணொ­ளி­கள் இணை­யப் பிர­சா­ரத்­தில் தலை­சி­றந்­தவை என்று கூறும் வல்லு­நர்­கள், இதைப் பொறுத்­த­வ­ரை­யில் இந்­தத் தேர்­த­லில் பாட்­டா­ளிக் கட்சி சிறந்த முறை­யில் செயல்­பட்­ட­தா­கக் கரு­து­கி­றார்­கள்.

சங்கிலித் தொடர்...

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் டாக்­டர் டான், பாட்­டா­ளிக் கட்­சி­யின் திரு­வாட்டி நிக்­கோல் சியா, ஜாமுஸ் லிம், மக்­கள் செயல் கட்­சி­யின் அர­சி­யல் தலை­வர்­கள் எல்­லா­ரும் தங்­கள் இணை­யப் பிர­சா­ரத்­தில் ஆர்­வத்­தைத் தூண்­டி­விட்­ட­னர்.

திரு­வாட்டி சியா­வும் டாக்­டர் டானும் தங்­கள் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கங்­கள் மூலம் ஆத­ர­வா­ளர்­களை ஈடு­ப­டுத்தி அவர்­க­ளிடம் இருந்து கருத்­து­களை வாங்­கி­னார்­கள்.

இத­னால் மேலும் ஆத­ர­வா­ளர்­கள் தங்­கள் கருத்­து­க­ளை­யும் தெரி­விக்க விருப்­பப்­பட்­ட­னர்.

இதன்­மூ­லம் ஒரு தொடர் சங்­கி­லியை அவர்­கள் ஏற்­ப­டுத்­திக் கொண்­டார்­கள் என்று பேரா­சி­ரி­யர் லிம் சன் சன் குறிப்­பி­டு­கி­றார். இந்­தக் காட்­சி­கள் எல்­லாம் ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றப்­பட்­டன.

மசெ­க­வின் தலை­மைச் செய­லா­ள­ரான பிர­த­மர் லீ சியன் லூங் இணை­யத்­தில் பேரணி பிர­சா­ரம் செய்­தார். பல மசெக அணி­களும் இணை­யம் வழி பிர­சா­ரத்­தில் இறங்கி தங்­கள் தொகு­திக்­கான எதிர்­கால திட்­டங்­களை விவ­ர­மாக விளக்­கின.

புதிய வேட்­பா­ளர்­கள் கன்னி உரை நிகழ்த்­தும் கணொ­ளி­களும் இணை­யத்தில் பதி­வேற்­றப்­பட்­டன. அவை நல்ல முறை­யில் பகிர்ந்து கொள்­ளப்­பட்­டன.

பாட்­டா­ளிக் கட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏறக்­கு­றைய ஒவ்­வொரு நாள் இர­வும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யைப் பதி­வேற்­றி­யது. அதன் முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் லோ தியா கியாங், காணொ­ளி­யில் தியோ­சியு மொழி­யில் உரை­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி, வேலை நிய­ம­னக் கொள்கை போன்ற முக்கி­ய­மான பிரச்­சி­னை­கள் பற்­றிய காணொளி­க­ளை­யும் தயா­ரித்து இருந்­தது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இணை­யப் பேர­ணி­களை நடத்தி­யது. இதன் தலைமைச் செய­லா­ளர் சீ சூன் ஜூவான் தன் தொகுதி உலாக்­களை ஃபேஸ்புக்கில் நேர­டி­யாகப் பதி­வேற்றினார்.

மக்­கள் குரல் கட்சி, தேசிய ஒரு­மைப்­பாட்டு கட்சி, ஒன்­று­பட்ட சிவப்­புப் புள்ளி கட்சி, மக்­கள் சக்தி கட்சி, சீர்­தி­ருத்­தக் கட்சி போன்ற கட்­சி­கள் இணையம் வழி நேரடி பேர­ணி­களை நடத்­தின.

மசெ­கவைப் பொறுத்­த­வ­ரை­, பிர­த­மர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பக்­கத்­து­டன் 1.6 மில்­லி­ய­னுக்­கும் அதிக பய­னீட்­டா­ளர்கள் தொடர்­பு­கொண்­டி­ருந்­த­னர். இது ஆளும் கட்­சி­யின் பரந்து விரிந்த சமூக ஊடக எல்­லையைப் பிரம்­மாண்­ட­மாக எடுத்­துக்­காட்­டி­யது என்றார் பேரா­சி­ரி­யர் ஆங்.

பிர­த­ம­ரின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் ஏரா­ள­மான முயற்­சி­கள் இடம்­பெற்­றன. அவை வியக்­கத்­தக்க அள­வில் சிறப்­பாக இருந்­தன என்று இவர் தெரி­வித்­தார். இதர சிங்­கப்­பூர் அர­சி­யல்­வா­தி­க­ளு­டன் ஒப்­பிடுகை­யில் பிர­த­மர் லீக்­குத் தான் ஆத­ர­வா­ளர்­கள் அதி­க­மாக இருந்­தார்­கள்.

பதிவுகளும் பலனும்

இருந்­தா­லும் மசெ­க­வின் சமூக ஊடக முயற்சி இணை­யத்­தில் எடுப்­பாக தெரி­யும் அள­வுக்கு உத­வ­வில்லை என்­கி­றார்­கள் வல்­லு­நர்­கள். ஜூலை 1 முதல் 10 வரை அர­சி­யல்­வா­தி­க­ளின் இணை­யப் பக்­கங்­களைக் கண்­கா­ணித்து வந்த 'மெல்ட்­வாட்­டர்' என்ற ஊட­கக் கண்­கா­ணிப்­புத் தளத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் பல நில­வ­ரங்­க­ளைக் காட்­டு­கின்­றன.

பெரும்­பா­லான ஃபேஸ்புக் பதி­வு­களை மசெக செய்து இருக்­கிறது. இருந்­தா­லும் அந்­தப் பதி­வு­கள் தொடர்­பில் ஈடு­பாடு காட்­டி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அந்த அள­வுக்கு இல்லை. மசெக ஜூலை 1 முதல் 10 வரைப்­பட்ட கால கட்­டத்­தில் 121 ஃபேஸ்புக், பதி­வேற்­றங்­களைச் செய்­தது. அதன் தொடர்­பில் இடம்­பெற்ற பதில் செயல்­பா­டு­கள் 131,000 ஆக இருந்­தன.

இந்த எண்­ணிக்கை, பாட்­டா­ளிக் கட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏறக்­கு­றைய 300,000 ஆக இருந்­தது. பாட்­டா­ளிக் கட்சி 78 பதி­வேற்­றங்­க­ளைச் செய்து இருந்­தது. சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி 54 பதி­வேற்­றங்­க­ளைக் கொண்டு சுமார் 122,000 கலந்­து­ற­வா­டல்­க­ளைச் சாதித்­தது.

இந்த விவ­கா­ரத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் மசெ­கவை பாட்­டா­ளிக் கட்சி முந்தி இருக்­க­லாம். ஆனால் இவை அப்­ப­டியே வாக்­கு­களில் பிர­தி­ப­லித்து இருக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று கவ­னிப்­பாளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

ஒரு வேட்­பா­ளர் அல்­லது ஒரு கட்சி சமூக ஊட­கத்­தில் வலு­வான கொள்கை அல்­லது வாதத்­தி­றன் அடிப்­ப­டை­யில் செல்­வாக்கு செலுத்­தி­னால் அத­னால் சாதக விளை­வு­களை எதிர்­பார்க்க முடி­யும் என்று முர்டாக் பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் ஊடகம் மற்றும் அரசியல் பற்றி ஆய்வு நடத்தும் இணை பேராசிரியர் டெரன்ஸ் லீ தெரிவிக்கிறார்.

இதை ஏற்­றுக்­கொண்ட டாக்­டர் பாங், சமூ­கப் பிர­சா­ரம் வாக்­காக மாறுமா மாறாதா என்­பது, ஒரு தக­வலை சொல்லி பல­ரை­யும் வசப்­ப­டுத்­தும் திறன், அந்­தத் தக­வல் எந்த அள­வுக்குத் திற­மை­யாக முன்­வைக்­கப்­ப­டு­கிறது என்ற நிலை ஆகிய இரண்­டை­யும் பொறுத்து இருக்­கும் என்றார்.

இந்த இரண்­டை­யும் அரங்­கேற்றி பாட்­டா­ளிக் கட்சி சமூக ஊட­கத்­தில் ஆதிக்­கம் செலுத்­தி­யது என்றார் டாக்­டர் பாங்.

ஃபேஸ்புக்கைவிட...

ஃபேஸ்புக் போன்ற பகி­ரங்­க­ தளங்­களை­விட பிரத்­தியே­க­மிக்க வாட்ஸ் அப், டெலி­கி­ராம் போன்ற தளங்­கள் வாக்­கு­களைப் பொறுத்­த­வரை அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கும் என்று பேரா­சி­ரி­யர் ஆங் குறிப்பிடு­கி­றார்.

தேர்­தல் பொதுக்­கூட்­டங்­கள் இல்­லா­த­தால் மீடி­யா­கார்ப் நேரடி தொலைக்­காட்சி விவா­தங்­களில் அதிக கவ­னம் திரும்­பியது. முன்­பெல்­லாம் மக்­கள் இதைப் பற்றி அவ்­வ­ள­வாக அலட்­டிக்­கொள்ள மாட்­டார்­கள் என்று தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் சட்டப் பேரா­சி­ரி­யர் கெவின் டான் கூறினார்.

தங்­கள் நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் பகிர்ந்துகொண்ட தக­வல்­கள், பதி­வேற்­றங்­கள், காணொ­ளி­கள் ஆகி­ய­வற்­றை வாக்­கா­ளர்­கள் பல­ரும் பகிர்ந்­து­கொண்­டதாக பேரா­சி­ரியர் லீ சுட்­டி­னார்.

இத்தேர்­த­லின்­போது, மின்­னி­லக்­கத் தளங்­களில் மற்­ற­வர்­களை ஈடுபடுத்­திய குடி­மக்­கள், குடிமை அமைப்­பு­கள், கருத்­தாய்­வா­ளர்­கள், தர்க்கவாதி­கள் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது என்­பதை டாக்­டர் பாங் சுட்­டி­னார். கலந்­து­ரை­யாடல்கள், விவா­திப்­பு­களில் மக்­கள் ஈடு­பட பல வாய்ப்­பு­களை இவை உரு­வாக்­கித் தந்­தன என்­றார் அவர்.

ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் போன்­ற­வற்­றில் இதர சிங்­கப்­பூ­ரர்­களும் பிர­ப­லங்­களும் தங்­கள் அர­சி­யல் கண்­ணோட்­டங்­களை முன்­வைத்­த­னர். இவை வாக்­கா­ளர்­க­ளி­டத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கக் கூடும் என்­கிறார் டாக்­டர் பாங்.

பொதுத் தேர்­தல் முடிந்­து­விட்­டா­லும் இணைய பாணி பிர­சா­ரம் இங்கு தொடர்ந்து இருந்து வரும் என்­பதே வல்­லுர்­க­ளின் கருத்­தாக உள்­ளது. அர­சி­யல் கட்­சி­கள் இணை­யத்­தை­யும் சமூக ஊட­கத்­தை­யும் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக எப்­படி எப்­படி எல்­லாம் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்­பது இந்­தத் தேர்­த­லின்­போது தெரிந்­தது. இதைப் பொறுத்­த­வரை இந்­தத் தேர்­தல் ஒரு புரட்­சித் தேர்­தல் என்று பேரா­சி­ரி­யர் இயூ­ஜின் டான் வர்­ணித்­தார்.

இப்­போ­தைய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் எது­வும் இல்­லா­மல் அடுத்த தேர்­தல் நடக்­கும் பட்­சத்­தில், பழைய பாணியும் புதிய இணைய பாணியும் கலந்­து­தான் இருக்­கும் என்று கூறும் இவர், இதுதான் இப்­போது கேள்வி என்­றார். ஐந்து ஆண்டு­களுக்கு ஒரு முறை வாக்­குப்பெட்­டி­யு­டன் தாங்­கள் பங்­கெ­டுத்­துக்­கொள்­ளும் ஒரு விவ­கா­ரம்­தான் அர­சி­யல் என்ற எண்­ணம், பல குடி­மக்­களைப் பொறுத்­த­வரை இனி­மேல் இருக்­காது என்­கி­றார் டாக்­டர் பாங்.

இணை­யப் பேர­ணி­கள், பொது ஒளி­பரப்பு­கள் எல்­லாம் உண்­மை­யி­லேயே மதிப்பு மிக்­க­வை­யாக இருந்­தன. பார்­வை­யா­ளர்­கள் பலவாறாக சிதைந்து இருக்­கக்­கூ­டிய ஒரு யுகத்­தில் இவை தேசிய நிகழ்ச்­சி­நி­ரல் ஒன்றை உரு­வாக்க உத­வின.

அந்த நிகழ்ச்சிநிரல் இணைய விவாதிப்புகளுக்கு உறுதுணையாக இருந்து அதில் ஒருமித்த கவனத்தைத் திருப்ப ஓரளவுக்கு உதவின என்று பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.