நிம்மதியே நிறைசெல்வம்

பண­மும் சுற்­றமும் அதி­க­மாக இருந்­த­ காலத்தைக் காட்டிலும் தற்­போ­தைய நிம்­ம­தியே இந்­தப் பண்­டி­கைக் ­கா­லத்­தில் தமக்­குக் கிடைத்­துள்ள நிறை­வான செல்­வம் என்­கி­றார் சக்­கர நாற்­கா­லி­யின் துணை­யு­டன் வசிக்­கும் திருவாட்டி வள்­ளி­யம்மை சக்­தி­யப்­பன், 61 (மேல்படம்).

கடந்த பத்­தாண்­டு­க­ளாக கெபுன் பாரு­வில் ஈரறை வீட்­டில் தனியே வசித்து வரும் திருவாட்டி வள்ளியம்மை, "தீபா­வ­ளி­தோறும் நான் கோவி­லுக்­குச் செல்­வேன். அக்­கம்­பக்­கத்­தில் இருப்­ப­வர்­களைக் காணும்­போது சிரித்­துப் பேசு­வேன். என் சமை­யலை விரும்பு­வோ­ருக்கு சமைத்­தும் தரு­வேன்," என்றார்.

சிலேத்­தார் ராணுவ முகா­மில் முன்பு சமை­யல் வல்­லு­ந­ரா­கப் பணி­யாற்­றிய திரு­வாட்டி வள்­ளி­யம்­மைக்கு 2010ல் வேலை­யி­டத்­தி­லேயே மார­டைப்பு ஏற்­பட்­டது. ஏற்­கெ­னவே நீரி­ழிவு பாதிப்­பும் இருந்­த­தால், 2014ல் இவ­ரது இடது­கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டது.

தாதிமை இல்­லத்­தி­னர் வாரம் இரு­முறை தம் வீட்­டிற்கு வந்து உடல்­நல பரி­சோ­தனை செய்­வ­து­டன், வீடு துடைத்து உத­வு­வ­தா­க­வும் இவர் சொன்­னார்.

"மற்ற நேரங்­களில் நான்­தான் என் வீட்டு வேலை­க­ளைச் செய்­வேன். இயந்­திர சக்­கர நாற்­காலி மூல­மாக வெளியே சென்று மளி­கைப் பொருள்­களை வாங்­கு­வேன், கட்­ட­ணங்­க­ளைச் செலுத்­து­வேன்," என்று இவர் தெரி­வித்­தார்.

பெற்­றோ­ரும் உடன்­பி­றந்­தோர் நால்­வ­ரும் இறந்­து­விட்ட நிலை­யில், தம் குடும்­பத்­தில் உயி­ரு­டன் இருப்­பது தாம் மட்­டுமே என்­றார் திரு­வாட்டி வள்­ளி­யம்மை. 28 ஆண்­டு­க­ளுக்கு முன்­ மணவிலக்கு பெற்ற இவர், முன்­னாள் கண­வரு­ட­னும் பிள்­ளை­கள் இரு­வரு­டனும் தொடர்­பில் இல்லை.

ஒரு­கட்­டத்­தில் வாழ்க்­கை வெறுத்­துப்­போ­ன­தால் உயி­ரையே மாய்த்­துக்­கொள்ளத் துணிந்­தார் இவர். ஆயி­னும், மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னை­யும் இறை­பக்­தி­யும் அதி­லி­ருந்து இவரை மீட்டன.

அடிக்­கடி கோவிலுக்குச் செல்­லும் இவர், சில நேரங்­களில் பஜனைப் பாடல் குழுக்­க­ளி­லும் பாடு­வார். அத்­து­டன், விரும்­பு­வோர்க்கு சுவை­யான சைவ உண­வை­யும் சமைத்­துத் தரு­வார். "பிற­ருக்குச் சமைத்­துத் தரு­வ­தில் நான் அள­வில்லா இன்­பம் அடை­கி­றேன்," என்கிறார் இவர்.

பரந்த நெற்­றி­யில் அக­ல­மான குங்­கு­மப் பொட்டு, கழுத்­தில் உருத்­தி­ராட்ச மாலை­யு­டன் காணப்­படும் திரு­வாட்டி வள்­ளி­யம்­மைக்கு சிர­மங்­கள் அதி­கம் இருந்­தா­லும் இவ­ரது மலர்ந்த முகம் காண்­போரை­யும் மகி­ழச் செய்­கிறது. இப்­போ­தைய சூழ­லில் பல­ரும் சிர­மப்­பட்டு வந்­தா­லும் தற்­கா­லி­க­மாக அதனை மறந்து தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டுங்­கள் என்­பதே இவரது அறி­வுரை.

செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!