மக்களை அச்சுறுத்தும் பொய்யான தகவல்களில் சில...

மக்களை அச்சுறுத்தும் பொய்யான தகவல்களில் சில...

1 mins read

'தேக்காவில் பலருக்கு கிருமித்தொற்று'

அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக தொற்று சம்பவங்கள் தேக்காவில் இருப்பதாகப் பொய்த் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

'கொரோனா கிருமி பரவியதால் தேக்கா நிலையம் மூடப்பட்டது'

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எல்லா ஈரச்சந்தைகளும் சுத்தம் செய்யப்படும். அவ்வாறு கடந்த திங்கள், செவ்வாய் இரு நாட்களும் வழமையான சுத்தப்படுத்தல் பணிகளுக்காக தேக்கா சந்தை மூடப்பட்டது. ஆனால், அது கிருமித்தொற்று காரணமாக மூடப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக பொய்ச் செய்தி பரவியது. ஈரச்சந்தைகளின் வழக்கமான சுத்திகரிப்பு குறித்த விவரங்களை https://www.nea.gov.sg என்ற தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத் தளத்தில் காணலாம்.

'கடைகள் மூட கொரோனாவே காரணம்'

சில கடைகள் அவ்வப்போது விடுமுறையை அறிவிக்கின்றன. பொருளாதார காரணங்களுக் காக சில கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. ஆனால், கடை மூடப்பட்டிருந்தால் உடனே அங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனாலேயே கடை மூடப்பட்டது என்றும் புரளி பரவுகிறது.

'தொற்று எண்ணிக்கை மறைக்கப்படுகிறது'

"அமைச்சு வெளியிடும் தகவல்களைவிட கூடுதலான பாதிப்புகள் சமூகத்தில் உள்ளன. தேக்கா நிலைய உணவுக்கடை ஒன்றில் ஐவருக்கு கிருமித்தொற்று. தேக்கா ஈரச்சந்தையிலும் பலருக்குக் கிருமித்தொற்று. சிங்கப்பூர் எங்கும் கிருமித்தொற்று உள்ளது" போன்ற பொய்ச் செய்திகள் பரவலாகப் பகிரப்படுகின்றன. இத்தகைய செய்திகளில் எந்த உண்மையுமில்லை. பொய்ச் செய்திகளால் வீணான அச்சம் ஏற்படுவதுடன், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்புவதும் குற்றமாகும்.