எட்டுப் பேருக்கு அனுமதி; உணவகங்களுக்கு நிம்மதி

3 mins read

மூன்­றாம் கட்­டத் தளர்­வின்­போது உண­வ­கங்­களில் எட்டுப் பேர் வரை ஒரே மேசை­ அருகில் அமர்ந்து உண்­ண­லாம் என்ற அறி­விப்பு பல்­வேறு உணவு கடைக்­கா­ரர்­களை மகிழ வைத்­துள்­ளது.

புதிய நடைமுறை நடப்புக்கு வந்த பின்னர் அதி­கம் பேர் வரு­வ­தன் மூலம் உண­வ­கத்­தின் இட வசதி வீணா­காது என்­ப­தால் தாம் மகிழ்ச்­சி­யு­டன் இருப்­ப­தாக தமிழ் முர­சி­டம் கூறினார் 'பனானா லீப் அப்­போலோ' உண­வ­கத்­தின் உரிமை­யாளரான சங்கர் நாதன்.

புதிய தளர்­வால் வர்த்­த­கம் மேம்­படும் என்று நம்­பும் சகுந்­த­லாஸ் உண­வ­க உரி­மை­யா­ளர் சரஸ்­வதி, இந்த எண்­ணிக்கை பத்துப் பேராக இருந்­தால் இன்­னும் சிறப்­பாக இருந்­தி­ருக்­கும் என கரு­த்துரைத்தார்.

ஆயி­னும், எந்த எண்­ணிக்­கை­யாக இருந்­தா­லும் மந்­த­மா­கி­யுள்ள வர்த்­த­கம் மீள்­வ­தற்கு சில காலம் எடுக்­கும் என்றார் மீராஸ் உண­வக ­உரி­மை­யா­ளர் ரஜாக். அத்­து­டன், தமது கடை சிறி­தாக இருப்­ப­தால் 8 பேர் கொண்ட மேசை­க­ளுக்கு இடையே சமூக இடை­வெ­ளியை உறுதி செய்­வது கடி­னம் என்­றும் அவர் கூறு­கி­றார்.

'புஃபே' முறையில் பரி­மா­று­வது மீதான கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து இருப்­ப­தைச் சுட்­டிய கிரீன்­லீப் கஃபே உரி­மை­யா­ளர் ஆர். கலைச்­செல்­வன், அதி­கம் பேர் இவ்­வாறு அனு­ம­திக்­கப்­ப­டு­வதை வர­வேற்­கி­றார்.

இருந்­த­போ­தும் தமது கடைக்கு வரும் பலர் உண­வ­கத்­தில் சாப்­பி­டு­வ­தற்­குப் பதி­லாக உண­வைப் பொட்­ட­லங்­க­ளாக வாங்கி செல்­

வ­தாக அவர் சுட்­டி­னார். நோய்­ ப­ர­வல் முறி­ய­டிப்­பு காலத்­தின்­போது மேற்­கொண்ட பழக்­கத்தை வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் இன்­னும் தொடருவதாக திரு கலைச்­செல்­வன் கூறி­னார்.

இல­வ­ச­மாக உணவை வழங்­கும் 'கிருஷ்­ணாஸ் ஃப்ரீ மீல்ஸ்' உண­வ­கம், விநி­யோ­கத்­தில் அதி­கம் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தால் உண­வ­கத்­திற்கு வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை உயர்வு தமது நிறு­வ­னத்தில் தாக்கத்தை ஏற்படுத் தாது என்று இதன் நிர்­வாகி ரகு­பதி தாஸ் தெரி­வித்­தார்.

மூன்­றாம் கட்ட தளர்வு நட­வ­டிக்­கை­யின்­போது மேடை நிகழ்ச்­சி­க­ளைக் காண 250 பேர் வரை (50 பேர் கொண்ட ஐந்து வட்­டா­ரங்­க­ளா­க) செல்ல முடி­யும்.

ஆனால் கேளிக்­கைக் கூடங்­கள், மதுக்­கூ­டங்­களில் இசை நிகழ்ச்­சி­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. "நேரடி இசை நிகழ்ச்­சி­களை விரை­வில் அனு­ம­தித்­தால் இசைக்­க­லை­ஞர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாது­காக்­கப்­படும். கேளிக்­கைக் கூடங்­களில் ஒலிக்­கும் நேரடி இசை கேட்­ப­வ­ருக்கு மகிழ்ச்சி தரும்," என்று கூறினார் தி 'கேவர்ன் ஹோர்ஸ் சிட்டி' கூடத்­தின் நிர்­வாகி லலிதா ஜெய்.

நோய் பரவல் அபா­ய­முள்ள இரவு நேர நட­வ­டிக்­கை­களை சோதனையிடுவது தொடரும் என சுகா­தார அமைச்சு டிசம்­பர் 14ஆம் தேதி அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது. நிலைமை தொடர்ந்து சீராக இருந்­தால் மூன்­றாம் கட்ட தளர்­வு காலத்­திற்­குள்­ளா­கவே இரவுநேர நட­வ­டிக்­கை­கள் சில­வற்­றுக்கு அனு­மதி வழங்­க­லாம் என்­றது அமைச்சு.

கடை உரி­மை­யா­ளர்­க­ளைப் போல வாடிக்­கை­யா­ளர்­களும் இனி வரும் மாற்­றங்­களை மகிழ்ச்­சி­யு­டன் எதிர்­பார்க்­கின்­ற­னர். பொரு­ளா­தா­ரத்­திற்கு, குறிப்­பாக உள்­ளூர் வர்த்­த­கங்­க­ளுக்கு இந்­தத் தளர்­வு­கள் புத்­து­யிர் ஊட்­டும் என நம்­பிக்கை கொண்­டுள்ள 37 வயது பொறி­யா­ளர் ஆர் சந்­தி­ர­சே­கர், இந்த முன்­னேற்­றம் நீடிப்­பது மக்­க­ளின் கையில்­ இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

நோய் பரவல் முறி­ய­டிப்­புக் காலக்­கட்­டத்­தின்­போது சிறை­யில் அடைபட்ட உணர்­வி­லி­ருந்து விடு­பட்­டதை நினை­வு­கூர்ந்த 70 வயது வர்த்­த­கர் அக­மது ஷா முக­மது ஹசான், அதி­கம் பேரு­டன் உண­வ­கங்­க­ளுக்­கும் கடைத்­தொ­கு­தி­

க­ளுக்­கும் செல்­லும்­போது மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றார்.

அர­சாங்­கம் சரி­யான நேரத்­தில் தளர்­வு­களை அறி­மு­கம் செய்­தி­ருப்­ப­தா­கக் கூறிய விற்­பனை நிர்­வாகி தேவேந்­தி­ரன், 64, படிப்­

ப­டி­யான அணு­கு­மு­றையே சிறந்­தது எனக் கரு­து­கி­றார்.

ஆயி­னும், மக்­க­ளின் நன்­மைக்­கா­க­வும் வர்த்­த­கங்­க­ளின் நன்­மைக்­கா­க­வும் இனி­மேல் தளர்வு நட­வ­டிக்­கை­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டால் நன்­றாக இருக்­கும் என்று ராணுவ அதி­காரி கிரண்குமார், 29, தெரி­வித்­தார்.